இந்தியாவில் ரெனோ கேப்டூர் எஸ்யூவி கார் விற்பனைக்கு கொண்டு வரும் நோக்கில் ரெனோ நிறுவனம் தீவர சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தி வருகின்றது. செப்டம்பர் மாத மத்தியில் கேப்டூர் எஸ்யூவி விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ரெனோ கேப்டூர் எஸ்யூவி விற்பனையில் உள்ள டஸ்ட்டர் காரின் பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள கேப்டூர் பல்வேறு வசதிகளை கொண்டதாக இருக்கும். ரஷ்யா சந்தையில் விற்பனையில் உள்ள கேப்டூர் க்ராஸ்ஓவர் கார்களுக்கு உரித்தான வடிவ தாத்பரியங்களை பெற்று முகப்பில் நேர்த்தியான கருப்பு வண்ண கிரிலுடன் கம்பீரமாக காட்சியளிக்கின்றது. இன்டிரியரை இருவண்ண கலவையிலான டேஸ்போர்டு , 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன நேவிகேஷன் ,ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உள்பட பல நவீன வசதிகளை கொண்டதாக விளங்கும். டஸ்ட்டரில் அதே 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டு 108 ஹெச்பி பவர் மற்றும் 245 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 வேகமேனுவல் கியர்பாக்ஸ் மற்றும்…
Author: MR.Durai
2016 ஆம் ஆண்டு ரூ.56.50 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்ட லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி காரின் பெட்ரோல் மாடல் விலை ரூ. 7 லட்சம் வரை குறைக்கப்பட்டு ரூ.51 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி விற்பனையை அதிகரிக்கும் நோக்கிலே விலை குறைக்கப்பட்டுள்ள பெட்ரோல் மாடல் சில குறிப்பிட்ட காலத்திற்க்கு மட்டுமே இந்த விலையில் தொடரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு வசதிகளை கொண்டுள்ள டிஸ்கவரி ஸ்போர்ட் கொண்டுள்ளது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆற்றல் 237 hp மற்றும் இழுவைதிறன் 340Nm ஆகும். இதில் 9 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்இடம்பிடித்துள்ளது. 5 + 2 என மொத்தம் 7 இருக்கைகளை பெற்றுள்ள லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் கார் 600மிமீ தண்ணீரிலும் மிக எளிதாக பயணிக்க முடியும் வல்லமை கொண்ட டிஸ்கவரி ஸ்போர்ட் காரில் சேறு , கல் , சகதி , ஜல்லி , மனல்…
மேம்படுத்தப்பட்ட புதிய டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர் ரூ. 50,434 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. 2017 டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரில் பிஎஸ் 4 மாசு கட்டுப்பாடு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. டிவிஎஸ் வீகோ கடந்த 2009ம் ஆண்டு முதல் விற்பனையில் உள்ள வீகோ ஸ்கூட்டரில் கூடுதலாக இரண்டு புதிய வண்ணங்களுடன் , இரு வண்ண இருக்கை கவர் , சில்வர் ஓக் பேனல்ஸ் , யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் போன்றவற்றை பெற்றுள்ளது. தற்பொழுது 10 வண்ணங்களில் கிடைக்கின்ற வீகோவில் புதிதாக சேர்கப்பட்டுள்ள வண்ணங்கள் மெட்டாலிக் ஆரஞ்சு மற்றும் டி கிரே ஆகிய வண்ணங்களாகும். மேலும் இந்த ஸ்கூட்டரில் முழு டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் ,கருப்பு வண்ண அலாய் வீல் , எல்இடி டெயில் விளக்குகளும் இடம்பெற்றுள்ளன. பிஎஸ் மாசு கட்டுப்பாடு எஞ்சினுடன் வந்துள்ள வீகோ ஸ்கூட்டரில் 8 பிஹெச்பி பவருடன் , 8 என்எம் டார்கினை வெளிப்படுத்தும் 109.74சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு ஆற்றலை எடுத்து…
இந்தியாவின் முன்னணி மற்றும் மிகப்பெரிய தொழில்துறை நிறுவனமான டாடா சன்ஸ் குழுமத்தின் புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்த நடராஜன் சந்திரசேகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சந்திரா என அழைக்கப்படும் ந.சந்திரசேகரன் (53) டாடா குழுமத்தின் முக்கிய அங்கமாக விளங்கும் டாடா கன்சல்டன்சி ஐடி பிரிவின் தலைமை செயல் தலைவராக செயல்பட்டு வந்த நிலையில் சைரஸ் மிஸ்த்ரி நீக்கப்பட்டதை தொடர்ந்து டாடா சன்ஸ் நிறுவனதலைவர் ரத்தன் டாடா உட்பட 5 பேர் கொண்ட குழுவினரால் சந்திரசேகரன் தேர்வு செய்யபட்டுள்ளார். தமிழர் என்.சந்திரசேகரன் நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்தவர். இவர், கோவை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பிஎஸ்சி அப்ளைடு சயின்சும், திருச்சி ஆர்.இ.சி, இன்ஜினியரிங் கல்லூரியில் முதுநிலை கம்ப்யூட்டர் அப்ளிகேஷனிலும் பட்டம் பெற்றார். 1987 ம் ஆண்டு டிசிஎஸ் நிறுவனத்தின் பணியில் இணைந்த பின்னர் பல்வேறு பதிவுகள் மற்றும் திட்டங்களுக்கு முன்னோடியாக செயல்பட்டதை தொடர்ந்து டிசிஎஸ் தலைமை செயல் அதிகாரியாக பயணியாற்றி வந்தார். டாடா குழுமத்தின் கீழ் செயல்படும்…
தானுந்துகளில் அதிகப்படியாக பயன்படுத்தும் எரிபொருள்களில் பெட்ரோல் மற்றும் டீசல் முன்னிலை வகிக்கின்றது. பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறப்பான தேர்வாக அமையும் என காணலாம். This article First Published at Feb 21 , 2013 … இது மேம்பட்ட பதிவாகும். மேலும் தற்பொழுது மாற்று எரிபொருள் பயன்பாடும் அதிகரித்தே வருகின்றது. மாற்று எரிபொருள்கள் சிஎன்ஜி,எல்பிஜி, மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள் மேலும் எதிர்காலத்தில் ஹைட்ரஜன் பயன்படுத்தப்படும் வாகனங்களும் வரவுள்ளன. பெட்ரோல் கார் சிறந்ததா ? டீசல் கார் சிறந்ததா ? பெட்ரோல் சிறந்ததா ? டீசல் சிறந்ததா ? என கேள்வி கார் வாங்கும் அனைவருக்குமே இருக்கும். இந்த சந்தேகத்தினை முழுமையாக பல விவரங்களை கொண்டு மிக தெளிவான முடிவினை எடுக்கலாம்…வாருங்கள்… கார் விலை பெட்ரோல் கார் ஆனது டீசல் காரை விட விலை குறைவாக இருக்கும். இது பற்றி சிறிய விளக்கத்திற்க்காக மட்டும் செவ்ரலே பீட் காரை பயன்படுத்தலாம்.…
வருகின்ற மார்ச் 3 , 2017ல் விற்பனைக்கு வரவுள்ள பெலினோ RS காரின் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. சாதரன பெலினோ காரை விட கூடுதலான பவரை பெற்ற மாடலாக பெலினோ ஆர்எஸ் விளங்கும். மாருதி பெலினோ RS தோற்ற அமைப்பில் முன்பக்கத்தில் வலைபின்னல் போன்ற அமைப்பினை கொண்ட கருப்பு வண்ண கிரிலுடன் பின்பக்க பம்பரில் சிறிய மாற்றங்களுடன் கருப்பு வண்ண அலாய் வீல் போன்றவை பெற்றுள்ளது. பவர்ஃபுல்லான பலேனோ RS 101 ஹார்ஸ் பவரை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் பூஸ்டர்ஜெட் டர்போ பெட்ரோல் எஞ்ஜினை பெற்றிருக்கும். இதன் டார்க் 150 நியூட்டன்மீட்டர் ஆகும். பவரை எடுத்து செல்ல 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம் பெற்றிருக்கும். பலேனோ ஆர்எஸ் ஒற்றை ஆல்ஃபா டாப் வேரியன்டில் மட்டுமே கிடைக்க உள்ளது. பெலினோ ஆர்எஸ் முக்கிய வசதிகள் பை-ஸெனான் தானியங்கி ஹெட்லேம்ப் பகல் நேர ரன்னிங் விளக்குகள் ஸ்மார்ட்பிளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்…