இந்தியாவில் ரூ.1.73 லட்சம் விலையில் புதிய கேடிஎம் ட்யூக் 250 பைக் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. 390 மற்றும் 200 டியூக் பைக்குகளுக்கு இடையில் புதிய டியூக் 250 பைக் நிலை நிறுத்தப்பட்டு மிகவும் சவலான விலையிலும் அமைந்துள்ளது. கேடிஎம் ட்யூக் 250 இரு பைக் மாடல்களுக்கும் இடையில் நிலை நிறுத்தப்பட்டுள்ள புதிய ட்யூக் 250 பைக்கில் ஆரஞ்சு மற்றும் வெள்ளை வண்ணங்களில் கிடைக்க உள்ளது. இந்த மாடலில் 250சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. யூரோ 4 மாசு விதிமுறைகளுக்கு ஏற்றவகையில் 30bhp பவரை வெளிப்படுத்தும் 250சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 24 NM வெளிப்படுத்தும். இதில் சிலிப்பர் கிளட்ச் ஆப்ஷனுடன் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. முன்பக்க டயரில் 300மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க டயரில் 230மிமீ டிஸ்க் பிரேக்குடன் ஏபிஎஸ் நிரந்தர அம்சமாக இணைக்கப்படவில்லை. கேடிஎம் டியூக் 250 பைக் விலை ரூ. 1.73 லட்சத்தில் அமைந்துள்ளது. (டெல்லி…
Author: MR.Durai
மேம்படுத்தப்பட்ட பல்வேறு வசதிகளை கொண்ட 2017 கேடிஎம் டியூக் 390 பைக் ரூபாய் 2.25 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. புதிய 390 ட்யூக் பைக்கில் ரைட் பை வயர் , சிலிப்பர் கிளட்ச் போன்ற வசதிகள் உள்ளன. கேடிஎம் டியூக் 390 1290 சூப்பர் டியூக் R பைக்கின் தோற்ற உந்துதலில் இருந்து உருவாக்கப்பட்ட மிகவும் ஆக்ரோஷமாக விளங்கும் முகப்பில் இரட்டை பிரிவுகளை முழு எல்இடி ஹெட்லேம்ப் பெற்றுள்ளது. மிக சிறப்பான ஸ்போர்ட்டிவ் 13.5 லிட்டர் பெட்ரோல் டேங்க் இரு வண்ண கலவையில் மற்றும் டிசைன் வடிவத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய 390 டியூக் பைக் மாடலில் யூரோ 4 மாசு விதிமுறைகளுக்கு ஏற்ற 44bhp பவரை வெளிப்படுத்தும் 373சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 35 NM வெளிப்படுத்தும். இதில் புதிய பைக்கில் 5 அங்குல டிஎஃப்டி திரை , டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டரில் ஸ்மார்ட்போன் கொண்டு மைகேடிஎம்…
மிகவும் சக்திவாய்ந்த புதிய பகானி ஹூவைரா ரோட்ஸ்டெர் கார் மாடலை 87வது ஜெனிவா மோட்டார் வாகன கண்காட்சி அரங்கில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 764 hp பவரை வெளிப்படுத்தக்கூடிய 6.0 லிட்டர் ட்வீன் டர்போசார்ஜ்டூ AMG M158 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. பகானி ஹூவைரா ரோட்ஸ்டெர் 100 பகானி ஹூவைரா ரோட்ஸ்டெர் கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட உள்ள நிலை உற்பத்தி தொடங்கப்பட்டுவிட்டதாகவும் பகானி தெரிவிக்கின்றது. மிக இலகுஎடை மற்றும் உறுதிமிக்க கார்பன் ஃபைபர் பாகங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள ஹூவைரா ரோட்ஸ்டெர் மாடலானது விற்பனையில் உள்ள கூபே ரக ஹூவைரா மாடலை விட 80 கிலோ எடை குறைவானதாக விளங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெர்சிடிஸ் ஏஎம்ஜி M158 6.0 லிட்டர் V12 ட்வீன் டர்போசார்ஜ்டு எஞ்சின் பொருத்தகப்பட்டுள்ள இந்த காரில் 764 hp பவரை வெளிப்படுத்தி 1000Nm டார்க் வரை அதிகபட்சமாக வெளிப்படுத்துகின்றது. ஹூவைரா பிசி காரைவிட 15 ஹெச்பி கூடுதலாகவும் , கூபே ரக ஹூவைரா காரை…
வருகின்ற மார்ச் 16ந் தேதி ஹோண்டாவின் புதிய க்ராஸ்ஓவர் ரக WR-V கார் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜாஸ் காரின் அடிப்படையிலான டபிள்யூஆர்-வி மாடலில் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷனில் கிடைக்கும். WR-V கார் புள்யூஆர்-வி மாடல் மிக நேர்த்தியான ஸ்டைலிங் அம்சங்களை பெற்றதாக க்ராஸ்ஓவர் மற்றும் காம்பேக்ட் ரக தொடக்கநிலை எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக விளங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. WR-V என்றால் ‘Winsome Runabout Vehicle’ என்பது விளக்கமாகும். பிஆர்-வி காரில் உள்ளதை போன்ற ஹோண்டாவின் மிக அகலமான க்ரோம் பட்டைக்கு மத்தியில் அமைந்துள்ள ஹோண்டாவின் லோகோ , முகப்பு விளக்கில் கருப்பு இன்ஷர்ட் , வட்ட வடிவ பனி விளக்கு போன்றவற்றை பெற்றுள்ளது. பக்கவாட்டில் உயரமான வீல் ஆர்ச் , பாடி கிளாடிங் , நேர்த்தியான அலாய் வீலை கொண்டுள்ளது. பின்புறத்தில் வித்தியாசமான அமைப்பினை வெளிப்படுத்தும் வகையில் டெயில்கேட் விளக்குகளுக்கு கீழாக பின்புற பம்பருக்கு மேலாக…
டாடா மோட்டார்ஸ் மற்றும் ஃபோக்ஸ்வேகன் குழுமமும் இணைந்து செயல்படுவதற்கான திட்டத்தினை 87வது ஜெனிவா மோட்டார் கண்காட்சி அரங்கில் அறிவிப்புகள் வெளியாகலாம். டாடா-ஃபோக்ஸ்வேகன் தங்களுடைய பிளாட்பாரத்தை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்புகள் உள்ளது. டாடா-ஃபோக்ஸ்வேகன் உலகின் முதன்மையான ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும் ,இந்தியாவின் டாடா மோட்டார்சுரும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஆட்டோ எக்னாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது இரு நிறுவனங்களும் இணைந்து தொழில்நுட்பம் சார்ந்த நுட்பங்களையோ அல்லது பிளாட்ஃபாரம் சார்ந்த தகவல்களையோ பகிர்ந்து கொள்ள வாய்ப்புகள் உள்ளது. டாடாவின் புதிய டாமோ பிராண்டிற்கு உருவாக்கப்பட்டுள்ள AMP பிளாட்பாரம் நுட்பங்களை ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளலாம் . மேலும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் MQB A0 நுட்பங்களை டாடா மோட்டார்சுடன் பகிரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கூட்டணி உருவாகும் பட்சத்தில் கார்களின் தரம் மற்றும் நுட்பம் சார்ந்த விடயங்களை இரு நிறுவனங்களும் மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. வருகின்ற மார்ச் 7ந் தேதி டாமோ பிராண்டில் புதிய…
கடந்த செப்டம்பர் 2015ல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்த ரெனோ க்விட் அமோகமான வரவேற்பினை பெற்று 1.30 லட்சம் கார்க்களை விற்பனை செய்துள்ளது. க்விட் காரில் 0.8லி மற்றும் 1.0 லி பெட்ரோல் எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளது. ரெனோ க்விட் மினி சைஸ் எஸ்யூவி போன்ற தோற்ற அமைப்பினை கொண்ட ரெனோ க்விட் கார் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிக வேகமாக பரவ தொடங்கியது. பல ஆண்டுகளுக்கு மேலாக முன்னனி வகித்த மாருதி ஆல்ட்டோ காரின் விற்பனையை புரட்டி போட்ட க்விட் கார் தொடக்கநிலை சந்தையில் முன்னணி மாடலாக வலம் வருகின்றது. க்விட் காரில் 53.2 பிஎச்பி பவருடன் , 72 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 800சிசி பெட்ரோல் எஞ்சின் மற்றும் 61 பிஎச்பி பவருடன் , 91 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 999சிசி பெட்ரோல் மாடல் என இருவிதமான மாடல்களிலும் 5 வேக மேனுவல் கியர்பாக்சை பெற்று விளங்குகின்றது. மேலும் 1…