ஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம், புதிய மின்சார பைக் மாடலை விற்பனைக்கு கொண்டு வருவதனை உறுதி செய்யும் வகையில் முதன்முறையாக இணையத்தில் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளராக விளங்கும் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் மாடலாக விளங்க உள்ளது. முன்பாக இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள ரிவோல்ட் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 போன்றவற்றை எதிர்கொள்ள உள்ளது.
விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற இந்த புதிய மின்சார பைக் மாடல்ரதிகபட்சமாக சிங்கிள் சார்ஜி 120 கிமீ முதல் 150 கிமீ ரேஞ்சு வழங்குவதுடன், அதிகபட்சமாக இந்த பைக்கின் டாப் ஸ்பீடு 80 கிமீ வேகத்தை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பைக்கில் எல்இடி ஹெட்லைட், அலாய் வீல், யூஎஸ்டி ஃபோர்க்கு, மற்றும் பெல்ட் டிரைவ் கொண்டதாக வெளிவந்துள்ள படங்களின் மூலம் தெரிய வந்துள்ளது. இரு பக்க கைப்பிடிகளிலும் பிரேக் லிவர் இணைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக விற்பனைக்கு வருகின்ற அனைத்து எலெக்ட்ரிக் வானங்களிலும் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிளை பெறுவதனை அடிப்படையாகவே கொண்டுள்ளதால் இதுபோன்ற அம்சங்களை இந்த புதிய எலெக்ட்ரிக் பைக் மாடலும் பெற வாய்ப்புள்ளது.
2020 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் விற்பனைக்கு வெளியாக உள்ள ஹீரோ எலெக்ட்ரிக் பைக் மாடல் பல்வேறு சிறப்பு வசதிகளை கொண்டதாக விளங்க உள்ளது.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஃபேரிங் ஸ்டைல் மோட்டார் சைக்கிள் அப்பாச்சி RR 310R 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் விற்பனைக்கு…
அமெரிக்காவின் பிரபலமான ஃபோர்டு இந்தியாவில் மீண்டும் கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள நிலையில் இதற்கான கூட்டணியை ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துடன் அமைக்க உள்ளதாக…
வரும் அக்டோபர் 3ஆம் தேதி கியா நிறுவனத்தின் கார்னிவல் மற்றும் EV 9 எலெக்ட்ரிக் எஸ்யூவி என இரண்டு மாடல்களும்…
ஹீரோ நிறுவனத்தின் பிரபலமான 97.2cc என்ஜின் பொருத்தப்பட்டு வட்ட வடிவ ஹெட்லைட் பெற்ற HF டான் மாடலை சாலை சோதனை…
இந்தியாவின் பிரபலமான யமஹா R15M பைக்கில் R1 பைக்கில் இருந்து பெறப்பட்ட கார்பன் ஃபைபர் வகையிலான பேட்டர்னை வெளிப்படுத்தும் பாடி…
சமீபத்தில் அமெரிக்கா பயணம் மேற்கோண்டிருந்த தமிழ்நாட்டின் முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களின் சந்திப்புக்கு பிறகு ஃபோர்டு இந்தியா தனது…