Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto Expo 2023

கியா SP கான்செப்ட் எஸ்யூவி அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2018

By MR.Durai
Last updated: 13,February 2018
Share
1 Min Read
SHARE

ஹூண்டாய் நிறுவனத்தின் கீழ் செயல்படும் தென்கொரியாவின் கியா மோட்டார்ஸ் இந்தியாவில் கார்கள் மற்றும் எஸ்யூவி மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ள நிலையில், 2018 ஆட்டோ எக்ஸ்போவில் கியா SP கான்செப்ட் எஸ்யூவி மாடல் உட்பட 16 சர்வதேச மாடல்களை கியா காட்சிப்படுத்தியுள்ளது.

கியா SP கான்செப்ட் எஸ்யூவி

ஆந்திரா மாநிலம் அனந்தப்புரில் தொழிற்சாலையை கட்டமைத்து வரும் கியா இந்தியா நிறுவனம், முதல் மாடலை 2019 ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வெளியிட உள்ள நிலையில், இந்தியாவின் நீண்டகால எஸ்யூவி பாரம்பரியத்துடன் புதிய நவீனத்துவமான டிசைன் மற்றும் வசதிகளை பின்பற்றி எஸ்பி கான்செப்ட் எஸ்யூவி மாடலை காட்சிப்படுத்தியுள்ளது.

இந்திய வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் கியா நிறுவனத்தின் பாரம்பரிய டிசைன் அம்சத்துடன் இளைய தலைமுறையினர் விரும்பும் வகையிலான அம்சங்களை பெற்று கம்பீரமாக காட்சியளிக்கின்ற எஸ்பி கான்செப்ட் இந்நிறுவனத்தின் தாய் நிறுவனமாக விளங்கும் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி பிளாட்பாரத்தை பின்புலமாக கொண்டதாகும்.

இந்நிறுவனத்தின் பாரம்பரியமான டைகர் மூக்கு கிரிலுடன், அசத்தலான பம்பர் டிசைனுடன், எல்இடி ஹெட்லைட் கொண்டுள்ள நிலையில் செங்குத்தான பனி விளக்குடன், பக்கவாட்டில் இரு வண்ண கலவையிலான 20 அங்குல அலாய் வீல், பின்புறத்தில் க்ரோம் பூச்சூடன் கொண்ட எல்இடி டெயில் விளக்கு, நேர்த்தியான பம்பர் ஆகியவற்றை பெற்றுள்ளது.

இன்டிரியர் அமைப்பில் உயர்தரமான கன்சோல் ஆகியவற்றுடன் நவீன தலைமுறையினர் விரும்பும் வசதிகளான ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே உட்பட பல்வேறு அம்சங்களை பெற்றிருக்கும்.

2019 ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரவுள்ள கியா எஸ்பி கான்செப்ட் மாடலை தொடர்ந்து பிகான்டோ, ரியோ,ஸ்டோனிக், ஸ்போர்டேஜ், மோஹேவ் மற்றும் ஸ்டிங்கர் உட்பட 16 மாடல்களை காட்சிப்படுத்தியுள்ளது.

 

kia ev9
கியா EV9 எலெக்ட்ரிக் எஸ்யூவி கான்செப்ட் அறிமுகம் : ஆட்டோ எக்ஸ்போ 2023
ஆட்டோ எக்ஸ்போ 2023: கியா KA4 (கார்னிவல்) அறிமுகம்
550 கிமீ ரேஞ்சு.., மாருதி சுசூகி eVX EV எஸ்யூவி கான்செப்ட் அறிமுகம் : Auto Expo 2023
டாடா சஃபாரி, ஹாரியர் எலெக்ட்ரிக் எஸ்யூவி டீசர் வெளியீடு – Auto Expo 2023
புதிய 16 சீட்டர் டாடா மோட்டார்ஸ் விங்கர் வெளியானது – ஆட்டோ எக்ஸ்போ 2020
TAGGED:Kia MotorsKia SP Concept
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
bajaj pulsar n125 bike
Bajaj
பஜாஜ் பல்சர் N125 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2025 Royal Enfield scram 440
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 440 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
ஏதெர் ரிஸ்டா இ ஸ்கூட்டர்
Ather energy
ஏதெர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
hero motocorp passion plus
Hero Motocorp
ஹீரோ பேஷன் பிளஸ் பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved