Categories: Auto Expo 2023

14 கார்களை காட்சிப்படுத்தும் எம்ஜி மோட்டார் – ஆட்டோ எக்ஸ்போ 2020

c0a0b mg vision i mpvஎம்ஜி ஹெக்டர் வெற்றியை தொடர்ந்து அடுத்து இசட்எஸ் இ.வி விற்பனைக்கு வெளியிட உள்ள நிலையில் ஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில் இணையம், எலெக்ட்ரிக் மற்றும் தானியங்கி சார்ந்த 14 கார்களை ஹேட்ச்பேக், செடான் மற்றும் யுட்டிலிட்டி வாகனங்கள் பிரிவில் காட்சிக்கு வைக்க உள்ளது.

எம்ஜி ஹெக்டர் வெற்றியை தொடர்ந்து அடுத்து இசட்எஸ் இ.வி விற்பனைக்கு வெளியிட உள்ள நிலையில் ஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில் இணையம், எலெக்ட்ரிக் மற்றும் தானியங்கி சார்ந்த 14 கார்களை ஹேட்ச்பேக், செடான் மற்றும் யுட்டிலிட்டி வாகனங்கள் பிரிவில் காட்சிக்கு வைக்க உள்ளது.

இந்நிறுவனம் எதிர்காலத்தில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ள வாகனங்கள் மற்றும் அதன் சார்ந்த நுட்பங்களை காட்சிப்படுத்துவதுடன், Vision-i என்ற கான்செப்ட்டின் முதல் டீசரை வெளியிட்டடுள்ளது. இந்த கான்செப்ட் முன்பாக 2019 ஷாங்காய் மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்ட ரோவி ஐ கான்செப்ட் போலவே உள்ளது. இது எஸ்.ஏ.ஐ.சி குழுமத்தின் எதிர்கால வாகனங்களின் கனெக்ட்டிவிட்டி, இணையம் மற்றும் ஓட்டுநரில்லா தானியங்கி கார் நுட்பத்தை கொண்டதாக காட்சிப்படுத்தப்பட்டது.

எம்.ஜி. மோட்டார் இந்தியாவின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ராஜீவ் சாபா ஆட்டோ எக்ஸ்போ 2020 மாடல்கள் பற்றி கூறுகையில் , “இந்தியாவில் நீண்ட கால தேவைக்கேற்ப சுற்றுச்சூழல் சார்பாக, அடுத்த தலைமுறை வாகனங்களை ஏற்றுக்கொள்வதை விரைவுபடுத்த எம்ஜி மோட்டார் இந்தியா கொண்டு வர உறுதி பூண்டுள்ளது. இந்த இலக்கை அடைய, எங்கள் தொழில்நுட்ப தலைமையாக உருவாக்குவதையும், இந்திய வாகன சந்தையில் எங்களின் பங்களிப்பை மேலும் பலப்படுத்துவதனையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம். இந்தியாவுக்கான எதிர்கால தொழில்நுட்பங்களை மையமாகக் கொண்ட இந்த ஆண்டின் ஆட்டோ எக்ஸ்போவில் நாங்கள் கொண்டு வரும் மாடல்களே ஒரு சான்றாகும். எக்ஸ்போவில் இடம்பெற உள்ள அனைத்து எம்ஜி தயாரிப்புகளும் புதுமை, சிறப்பான வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் தலைமையிலான வளர்ச்சி ஆகியவற்றில் எங்கள் முக்கிய கவனம் செலுத்தும் நோக்கில் செயல்படுகின்றோம். ”  என குறிப்பிட்டுள்ளார்.

Share
Published by
MR.Durai
Tags: MG Motor

Recent Posts

ஆடம்பர கார்களுக்கு எம்ஜி செலக்ட் டீலரை துவங்கும் ஜேஎஸ்டபிள்யூ..!

ஜேஎஸ் டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆடம்பர கார்களுக்கு மற்றும் பிரத்தியேகமான நியூ எனர்ஜி வாகனங்கள் விற்பனை செய்வதற்கு எம்ஜி…

16 hours ago

160கிமீ ரேஞ்ச் வழங்கும் 2024 ரிவோல்ட் RV400 அறிமுகமானது

ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான RV400 எலெக்ட்ரிக் பைக்கில் விரைவு சார்ஜர் வசதியுடன் முந்தைய மாடலை விட கூடுதலாக 10…

21 hours ago

இந்தியாவில் ஹோண்டாவின் 300-350cc பைக்குகள் ரீகால் அழைப்பு

கேம் ஷாஃப்ட் மற்றும் வீல் ஸ்பீடு சென்சாரில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்வதற்காக ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது 300…

1 day ago

முதல் நாளில் 1,822 முன்பதிவுகளை அள்ளிய கியா கார்னிவல்..!

கியா நிறுவனத்தின் ஆடம்பர மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள 2024 கார்னிவல் எம்பிவி மாடலின் முன்பதிவு துவங்கப்பட்ட முதல் நாளிலே…

1 day ago

டிரையம்ப் ஸ்பீடு T4 Vs ஸ்பீடு 400 வித்தியாசங்கள் என்ன..!

டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள குறைந்த விலை ஸ்பீடு T4 மாடல் மற்றும் ஏற்கனவே விற்பனையிலிருந்து தற்போது…

2 days ago

ரூ.84,990 விலையில் ரிவோல்ட் RV1, RV1+ இ-பைக் விற்பனைக்கு அறிமுகமானது

ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல் RV1 மற்றும் RV1 பிளஸ் என இரண்டு மாடல்கள் விற்பனைக்கு…

2 days ago