Automobile Tamilan

டிவிஎஸ் அப்பாச்சி 200 Fi எத்தனால் அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2018

இந்திய இரண்டு சக்கர வாகன சந்தையில் மிக முக்கியமான மாடல்களின் ஒன்றான டிவிஎஸ் அப்பாச்சி 200 பைக்கின் அடிப்படையில் எத்தனால் கொண்டு இயங்கும் டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 Fi எத்தனால் மாடல் ஆட்டோ எக்ஸ்போ 2018 கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி 200 Fi எத்தனால்

சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கும் நோக்கில் புதைப்பொருள் எரிபொருள்களுக்கு மாற்றாக மின்சாரம் மற்றும் எத்தனால் போன்ற எரிபொருட்கள் எதிர்கால ஆட்டோமொபைல் வாகனங்களில் முக்கிய பங்காற்றும் என்பதனால் அதன் அடிப்படையில் எத்தனால் கொண்டு இயக்கப்படுகின்ற அப்பாச்சி 200 பைக்கை டிவிஎஸ் காட்சிப்படுத்தியுள்ளது.

பெட்ரோல் மாடலின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள எத்தனால் கொண்டு இயக்கப்படுகின்ற Twin-Spray-Twin-Port EFI அப்பாச்சி 200 சிசி மாடலில் 21 PS ஆற்றல் 18.1 Nm டார்க் வழங்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பெட்ரோலுக்கு மாற்றாக விளங்க உள்ள எத்தனால் குறைந்த செலவில் தயாரிப்பதுடன் காற்று மாசுபாட்டை பெருமளவு குறைக்கும் என்பதனால் கச்சா எண்ணெய் இறக்குமதியை அரசு குறைக்க திட்டமிட்டு வரும் நிலையில் எத்தனால் கொண்டு இயக்கப்படுகின்ற பைக்குகள் மிகுந்த முக்கியத்துவம் பெற வாய்ப்புகள் உள்ளது.

விற்பனை செய்யப்படுகின்ற அப்பாச்சி ஆர்டிஆர் 200 எஃப்ஐ மாடலின் தோற்ற அமைப்பினை பெற்று விளங்குகின்ற எத்தனால் மாடலில் பெட்ரோல் டேங்க் வடிவமைப்பில் மட்டும் பச்சை நிறத்திலான கிராபிக்ஸ் ஸ்டிக்கர் இணைக்கப்பட்டுள்ளது.

இதைத் தவிர டி.வி.எஸ் ஆட்டோ எக்ஸ்போவில் பல்வேறு மாடல்களை காட்சிப்படுத்தியுள்ளது. அவற்றில் மிக முக்கியமானவை என்டார்க் 125, க்ரியோன் எலெக்ட்ரிக்செப்பெலின் கான்செப்ட் ஆகிய மாடல்களை காட்சிப்படுத்தியுள்ளது.

Exit mobile version