7 இருக்கைகளை கொண்ட சாங்யாங் XAVL எஸ்யூவி கான்செப்ட் மாடல் 2017 ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் காட்சிப்படுத்தபட்டுள்ளது. சிறிய ரக XAV எஸ்யூவி கான்செப்ட் மாடலை அடிப்படையாக கொண்டதே XAVL மாடலாகும்.
சாங்யாங் XAVL எஸ்யூவி
1990 ஆம் ஆண்டு வெளிவந்த இரண்டாம் தலைமுறை கோரான்டோ எஸ்யூவி மாடலை அடிப்படையாக கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ள XAVL மாடலில் நவீன கார் தொடர்புகள் , பல்வேறு புதிய பாதுகாப்பு அம்சங்களாக பாதசாரிகள் , ஒட்டுநர் மற்றும் பயணிகளுக்கான பாதுகாப்பினை ஏற்படுத்தும் மாடலாக இந்த எஸ்யூவி விளங்கும்.
இந்த கான்செப்ட் காரின் நீளம் 4630மிமீ, அகலம் 1866மிமீ மற்றும் உயரம் 1640மிமீ ஆகும். இதன் வீல்பேஸ் 2775மிமீ ஆகும். பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றதாக வரவுள்ள மாடலில் ஹைபிரிட் ஆப்ஷனும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
2019 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதனை தொடர்ந்து இந்த எக்ஸ்ஏவிஎல் கான்செப்ட் எஸ்யூவி இந்தியாவிலும் விற்பனைக்கு வரலாம்.
எக்ஸ்ஏவிஎல் கான்செப்ட் எஸ்யூவி படங்கள்
[foogallery id=”17324″]