பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் மிக முக்கியமானதாக கருதப்படுகின்ற ஏபிஎஸ் அம்சத்தை 2018 சுஸூகி ஜிக்ஸர் பைக்கில் இணைத்து ரூ. 87,250 விலையில் இந்நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள்ளது. ஏபிஎஸ் பிரேக் பொருத்தப்பட்ட வேரியன்ட் ஜிக்ஸெர் எஸ்எஃப் பைக்கில் இடம்பெற்றுள்ள சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கினை அடிப்படையாக கொண்டதாக வந்துள்ளது.
இந்தியாவில் ஏப்ரல் 2018 முதல் ஏபிஎஸ் பிரேக் அல்லது சிபிஎஸ் பிரேக் கட்டாயம் என உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ள நிலையில் , பெரும்பாலான மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் ஏபிஎஸ் பிரேக்கினை இணைக்க தொடங்கியுள்ளனர். இதற்கு முன்பாக ஜிக்ஸர் SF ஃபுல் ஃபேரிங் பைக்கில் இடம்பெற்றிருந்த சிங்கிள் சேனல் ஏபிஎஸ் தற்போது நேக்டு மாடலில் வழங்கப்பட்டுள்ளது.
14.8 hp ஆற்றலை வெளிப்படுத்தகூடிய 155சிசி என்ஜினை பெற்றுள்ள ஜிக்ஸெர் வரிசை பைக் என்ஜினில் சுஸூகி ஈக்கோ பெர்ஃபாமென்ஸ் நுட்பத்தினை பெற்றுள்ளதால் சிறப்பான மைலேஜ் தருகின்றது. இதன் இழுவைதிறன் 14.02 Nm ஆகும். இஞ்ஜின் ஆற்றலை கடத்த 5 வேக கியர்பாக்சினை பெற்றுள்ளது.
முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரினை பெற்றுள்ளது.ஜிக்ஸெர் நேக்டு பைக்கின் முன்பக்க டயரில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க டயரில் 240மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் ட்ரம் பிரேக் ஆப்ஷனலாக கிடைக்கின்றது.
தற்போது விற்பனையில் உள்ள ட்வீன் டிஸ்க் பிரேக் பெற்ற மாடலை விட ரூ.6321 வரை அதிகரிக்கப்பட்டிருக்கும் என்பதனால் சுசூகி ஜிக்ஸெர் ஏபிஎஸ் ஆரம்ப நிலை மாடல் ரூ. 87,250 ஆக எக்ஸ்-ஷோரூம் விலை அமைந்துள்ளது.