2020 ஹீரோ கிளாமர் பிஎஸ்6 பைக்கின் முக்கிய சிறப்புகள்

cf852 hero glamour bs6 1

125 சிசி சந்தையில் மிக சிறப்பான இரு சக்கர வாகனமாக விளங்குகின்ற 2020 ஹீரோ கிளாமர் 125 பிஎஸ்6 என்ஜினை பெற்றதாக விற்பனைக்கு ரூ.68,900 ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாடலில் இடம்பெற்றுள்ள என்ஜின், வசதிகள் விபரம் பின் வருமாறு :-

125சிசி சந்தையில் கிடைக்கின்ற சூப்பர் ஸ்ப்ளெண்டர் உட்பட ஹோண்டா சைன், ஹோண்டா எஸ்பி 125, பஜாஜ் பல்சர் 125, டிஸ்கவர் 125 மற்றும் யமஹா சல்யூட்டோ 125 போன்ற மாடல்களுக்கு சவாலினை ஏற்படுத்துகின்ற கிளாமரின் மற்ற விபரங்களை காணலாம்.

ஸ்டைலிங் அம்சங்கள்

முற்றிலும் மாறுபட்ட புதிய டைமண்ட் சேஸ் பெற்ற கிளாமரின் ஸ்டெபிளிட்டி தன்மை, முன்புற டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷன் டிராவல் 14 சதவீதம் கூடுதலாகவும், பின்புறம் ட்வின் ஷாக் அப்சார்பர் சஸ்பென்ஷன் 10 சதவீதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அடுத்தப்படியாக, கிரவுண்ட் கிளியரண்ஸ் 20 சதவீதம் உயர்த்தப்பட்டு, இப்போது 180 மிமீ பெற்றுள்ளதால் அனைத்து சாலைகளிலும் பயணிக்கும் வகையில் உள்ளது.

மற்றபடி தோற்ற அமைப்பில் சில ஸ்டைலிங் அம்சங்களை பெற்றிருப்பதுடன் புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் கொண்டதாகவும், கேண்டி சிவப்பு, நீலம், கிரே மற்றும் ஸ்போர்ட்ஸ் சிவப்பு என நான்கு விதமான நிறங்களை பெற்றுள்ளது.

hero-glamour-bs6

என்ஜின்

இதுவரை நான்கு வேக கியர்பாக்ஸ் பெற்று வந்த கிளாமர் பிஎஸ்6 முறைக்கு மாற்றப்பட்ட நிலையில் ஐந்து வேக கியர்பாக்ஸ் பெறுகின்றது.

XSens ப்ரோகிராம்டு ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் நுட்பத்துடன் 125cc மோட்டார் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 7,500rpm-ல் 10.73bhp பவரும், 6,000rpm-ல் 10.6Nm டார்க்கையும் வழங்குகின்றது. ஐ3எஸ் எனப்படும் ஐடியல் ஸ்டார்ட் சிஸ்டம் நுட்பத்தினை கூடுதலாக பெற்றிருக்கின்றது. இது தவிர புதிதாக போக்குவரத்து  நெரிசல் மிகுந்த நேரங்களில் ஆட்டோ செயில் டெக் எனப்படுவதன் மூலம் கியரை அடிக்கடி மாற்றாமல் சுலபமாக பயணிக்கும் நோக்கில் கிளட்சினை ரிலீஸ் செய்தாலே ஆக்சிலேரேட்டர் கொடுக்காமலே குறைந்தபட்ச வேகத்தில் பைக்கினை இயக்க உதவும்.

4cf9c hero glamour bs6 console 1

வசதிகள்

2020 ஹீரோ கிளாமர் பைக்கில் வழங்கப்பட்டுள்ள மற்றொரு வசதிகளில் ஒன்று புதிய கிளஸ்டர் கருவி இணைக்கப்பட்டு நிகழ்நேர எரிபொருள் சிக்கனத்தை அறியும் அம்சத்தைக் கொண்டுள்ளது. முன்புறத்தில் டிஸ்க் அல்லது இருபக்க டயர்களிலும் டிரம் பிரேக் கொடுக்கப்பட்டு ஐபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தை பெற்றுள்ளது.

வேரியண்ட் விபரம்

240 மிமீ டிஸ்க் உடன் கூடிய பிரேக் மற்றும் இரண்டு டயர்களிலும் 130 மிமீ டிரம் பிரேக்கினை கொண்டுள்ளது.

5822c hero glamour bs6 rear 1

ஹீரோ கிளாமர் விலை பட்டியல்

bs6 Hero glamour  ரூ .68,900 (drum)

bs6 hero glamour ரூ. 72,400 (disc)

(எக்ஸ்-ஷோரூம், டெல்லி).

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *