ராயல் என்ஃபீலடு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் புதிய தலைமுறை கிளாசிக் 350 பைக்கின் சாலை சோதனை ஓட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், முதன்முறையாக முழுமையான உற்பத்தி நிலைக்கு எட்டிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் வீடியோ கசிந்துள்ளது.
முன்பாக முற்றிலும் மேம்படுத்தப்பட்ட தண்டர்பேர்டு 350 மாடலுக்கு மாற்றாக வெளியான மீட்டியோர் 350 பைக்கில் உள்ள இன்ஜின் பெற உள்ள கிளாசிக் 350 மாடலில் அதிகபட்சமாக 20.2 பிஹெச்பி பவரையும், 27 என்எம் டார்க்கினை வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம் பெற்றுள்ளது.
விற்பனையில் உள்ள மாடலில் இடம்பெற்றிருந்த கிளஸ்ட்டர் அமைப்பில் கூடுதலாக, டிஜிட்டல் அமைப்பு உட்பட டிரிப்பர் நேவிகேஷன் பெற்றதாக விளங்குகின்றது. மீட்டியோர் 350, ஹிமாலயன் பைக்கில் கூகுள் ஆதரவுடன் ஸ்மார்ட்போன் ப்ளூடூத் இணைப்பதனால் டர்ன் பை டர்ன் நேவிகேஷன் வழங்கப்பட்டுள்ளது.
கூடுதலாக இணைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் முறையில் வழங்கப்பட்டுள்ள பகுதியில் ஈக்கோ மோட், டிரீப்மீட்டர், ஓடோமீட்டர், எரிபொருள் அளவு, மற்றும் கடிகாரம் ஆகியவை இடம்பெற்றுள்ளது.
புதிய 2021 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாடல் அடுத்த சில மாதங்களுக்குள் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
View this post on Instagram