Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

விரைவில்.., புதிய ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 விற்பனைக்கு வெளியாகிறது

by automobiletamilan
December 29, 2020
in பைக் செய்திகள்

மீட்டியோர் 350 பைக்கின் வெற்றியை தொடர்ந்து புதிய J-பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்ட புதிய தலைமுறை ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 பைக்கில் இடம்பெற உள்ள மாற்றங்கள் மற்றும் சிறப்புகள் தற்போது வரை சோதனை ஓட்ட படங்களில் மூலம் பெறப்பட்ட தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

ராயல் என்பீல்ட் கிளாசிக் 350

தற்போது விற்பனையில் கிடைக்கின்ற பைக்கின் அடிப்படையான ரெட்ரோ ஸ்டைல் தோற்றத்தை தக்கவைத்துக் கொள்ளுகின்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ள கிளாசிக் 350 பைக்கில்  மீட்டியோரில் உள்ளதை போன்ற டபுள் கார்டிள் சேஸ் (dual-cradle) கொடுக்கப்பட்டு பெரும்பாலான இடங்களில், க்ரோம் பாகங்கள் இணைக்கப்பட்டு புதிய மேம்பட்ட இருக்கைகள், பக்கவாட்டில் வழங்கப்படுகின்ற அமைப்புகள் தொடர்ந்து இடம்பெற்றுள்ளது. அடுத்தப்படியாக, ஹெட்லேம்ப் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை, டெயில் லைட் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

350சிசி இன்ஜின்

முந்தைய என்ஜினை விட மிக சிறப்பான முறையில் ட்யூன் செய்யப்பட்டு, பெருமளவு அதிர்வுகள் குறைக்கப்பட்ட புதிய 349சிசி ஏர் ஆயில் கூல்டு இன்ஜினை SOHC முறையில் வடிவமைத்து அதிகபட்சமாக 20.2 பிஹெச்பி பவரையும், 27 என்எம் டார்க்கினை வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கில் தொடர்ந்து 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டு, டூயல் சேனல் ஏபிஎஸ் இணைக்கப்பட்டிருக்கும். குறைந்த விலை வேரியண்டில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொடுக்கப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளது.

மீட்டியோர் 350 பைக்கில் இடம்பெற்றிருந்த டிரிப்பர் நேவிகேஷன் அம்சத்தை கிளாசிக் 350 பைக்கும் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த அம்சம் ப்ளூடூத் ஆதரவில் இயங்கும் டர்ன் பை டர்ன் நேவிகேஷன் வழங்கும் வகையில் டிரிப்பர் நேவிகேஷன் பெறுவதற்கு தனியான கிளஸ்ட்டரும் கொடுக்கப்படலாம்.

அறிமுகம் எப்போது ?

சமீபத்தில் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் கிளாசிக் 350 பைக் முழுமையாக உற்பத்தி நிலையை எட்டியுள்ளதாக அமைந்திருக்கின்றது. முன்பே ராயல் என்பில்ட் குறிப்பட்டதை போன்று ஒவ்வொரு காலாண்டிற்கு ஒரு பைக் என அறிவிக்கப்பட்டுள்ளதால், மார்ச் 2021-க்குள் கிளாசிக் விற்பனைக்கு வருவது உறுதியாகியுள்ளது.

ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 விலை ரூ.1.70 லட்சத்திற்குள் துவங்க வாய்ப்பு உள்ளது.

image source

Tags: Royal Enfield Classic 350
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version