2023 பஜாஜ் சேட்டக் பிரீமியம் எடிசன் விலை மற்றும் சிறப்புகள்

2023 bajaj chetak

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பிரிவில் உள்ள சேட்டக் மின்சார ஸ்கூட்டரின் ரேஞ்சு 108 கிமீ ஆக அதிகரிக்கப்பட்டு, சில நிறங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட சேட்டக் பேட்டரி ஸ்கூட்டரில் மேட் கிரே, மேட் கரீபியன் ப்ளூ மற்றும் சாடின் பிளாக் என மூன்று புதிய நிறங்கள் அறிமுகமாகியுள்ளது.

2023 Bajaj Chetak

சேட்டக் மின்சார ஸ்கூட்டர்களுக்கான பிரீமியம் வேரியண்டில் மேம்படுத்தப்பட்ட இரண்டு நிறதிலான இருக்கை, பாடி நிறத்தில் ரியர் வியூ மிரர் போன்ற சில வடிவ மாற்றங்கள் மற்றும் மூன்று புதிய வண்ண விருப்பங்கள்-மேட் கிரே, மேட் கரீபியன் ப்ளூ மற்றும் சாடின் பிளாக் வந்துள்ளன. கூடுதலாக, சேட்டக்கில் கலர்ஃபுல்லான LCD கன்சோலை பெறுகிறது.

bajaj chetak lcd display

இந்த ஸ்கூட்டரில் ஹில் ஹோல்ட் அசிஸ்ட், கீலெஸ் என்ட்ரி மற்றும் மொபைல் போன் யூஎஸ்பி சார்ஜர் போன்ற பல அம்சங்களுடன் MyChetak ஆப் பயன்படுத்தி ஸ்கூட்டரை உங்கள் மொபைலுடன் இணைக்க முடியும். இதன் மூலமாக சார்ஜிங் இருப்பு, ரேஞ்ச் சரிபார்க்க, வாகன நிறுத்துமிடம் உங்கள் ஸ்கூட்டரைக் கண்டறியப் பயன்படும். ஸ்கூட்டர் கவிழும் போதோ அல்லது விபத்து ஏற்படும் சமயத்தில் அவசர எண்ணிற்கு அறிவிப்பை பெறுவார்கள்.

சேட்டக் மாடலில் 3 கட்ட permanent magnet synchronous motor அதிகபட்சமாக 5 bhp பவர் மற்றும் 20 Nm டார்க் வழங்குகின்றது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 63 கிமீ ஆகும்.  முன்பாக 90 கிமீ ரேஞ்சு வழங்கி வந்த ஸ்கூட்டர் 108 கிமீ ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

2023 bajaj chetak black

2023 பஜாஜ் சேட்டக் பிரீமியம் வேரியண்ட் விலை ₹. 1.52 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பெங்களூரு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *