125cc சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற பிரசத்தி பெற்ற ஹோண்டா ஷைன் 125 பைக்கின் 2023 ஆம் ஆண்டிற்கான மாடல் பிஎஸ்-6 இரண்டாம் கட்ட OBD-2 மற்றும் E20 எரிபொருளுக்கு ஏற்றதாக விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பாக எஸ்பி125 அறிமுகம் செய்யப்படதை தொடர்ந்து டியோ, யூனிகார்ன் 160 மாடல்களை தொடர்ந்து ஷைன் 125 வெளியிடப்பட்டுள்ளது. விலை ரூ.900 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
2023 Honda Shine 125
புதிய ஷைன் 125cc பைக்கில் அதிகபட்சமாக 10.8hp குதிரைத்திறன், 10.9Nm டார்க் வெளிப்படுத்தும் 123.94cc, ஏர்-கூல்டு, ஃப்யூவல்-இன்ஜெக்டட் இன்ஜின் பெற்று, ஐந்து வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
தோற்ற அமைப்பில் மாற்றமில்லை, ஆனால் புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் பெற்றதாக வந்துள்ளது. தொடர்ந்து டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ட்வின், ப்ரீலோட் அட்ஜஸ்டபிள் ரியர் ஷாக் அப்சார்பர் உடன் டைமண்ட் ஃபிரேம் உள்ளது.
ஷைன் 125 பைக்கில் முன்பக்கத்தில் 220 மிமீ டிஸ்க் அல்லது 130 மிமீ டிரம் மற்றும் பின்பக்கத்தில் 130 மிமீ டிரம் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் 80/100-18 M/C 47P டயர் மற்றும் பின்புறத்தில் 80/100-18 M/C 54P டயர் கொண்டுள்ளது.
10.5 லிட்டர் கொள்ளளவு பெற்ற பெட்ரோல் டேங்க் கொண்டு 2023 ஹோண்டா ஷைன் 125 பைக் மாடலின் பரிமாணங்கள் 2046 மிமீ உயரம், அகலம் 737 மிமீ மற்றும் நீளம் 1116 மிமீ ஆகவும், வீல்பேஸ் 1285 மிமீ, இருக்கை உயரம் 791 மிமீ, இருக்கை நீளம் 651 மிமீ பெற்றுள்ளது. இந்த மாடலின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 162 மிமீ ஆகவும் எடை 113 கிலோஆகும்.
2023 Honda Shine 125 Price
- SHINE 125 DRUM Rs.82,500
- SHINE 125 DISC Rs.86,500
(All Price Ex-showroom Tamilnadu)