Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

2023 கோமகி TN 95 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை மற்றும் சிறப்புகள்

by automobiletamilan
May 27, 2023
in பைக் செய்திகள்
1
SHARES
0
VIEWS
ShareRetweet

Komaki TN 95 sport electric scooter

கோமகி எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பாளரின்  2023 கோமகி TN-95 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மேம்பட்ட பல்வேறு வசதிகள் கொண்டதாக 150km/charge மற்றும் 180km/charge என இரண்டு விதமாக விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

வாகன நிலை தடுமாறுவதனை தடுக்கும் ஆன்டி ஸ்கிட் நுட்பத்தை கொண்டுள்ள டிஎன்-95 மின்சார ஸ்கூட்டரில் தீப்பறுவதனை தடுக்கும் அம்சத்துடன் ஆப் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்ற மிக சிறப்பான LiFePO4 (lithium iron phosphate) பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

2023 Komaki TN 95 escooter

டிஎன்-95 மாடலில் உள்ள 74V 44AH LiFePO4 (லித்தியம் அயர்ன் பாஸ்பேட்) பயன்பாட்டு அடிப்படையிலான ஸ்மார்ட் பேட்டரி ஆனது செயலி மூலம் கட்டுப்படுவதுடன், தீப்பறுவதனை முழுமையாக தடுக்கும் வகையிலான அம்சத்துடன் வந்திருக்கின்றது.

TN-95 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 5kW ஹப் மோட்டார் கொண்டு இயக்கப்படுகிறது. 50amp கண்ட்ரோலரை பயன்படுத்துகிறது. பேட்டரி மின்சார ஸ்கூட்டர் மூன்று ரைடிங் மோடுகளை கொண்டுள்ளது. அவை ஈகோ, ஸ்போர்ட்ஸ் மற்றும் டர்போ ஆகும். ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங்  அம்சத்தை பெற்றுள்ளது. இந்த மாடலில் உள்ள பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்வதற்கு நான்கு முதல் ஐந்து மணி நேரம் ஆகும்.

Komaki TN 95

கோமகி TN-95 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் 75-85Kmph ஆக உள்ள நிலையில் ரேஞ்சு 130-150Km/charge ஸ்போர்ட் கிளாசிக் மற்றும் 150-180Km/charge ஸ்போர்ட் கிளாசிக் பெர்ஃபாமென்ஸ் என இரண்டு விதமாக கிடைக்கின்றது.

நிகழ்நேரத்தில் இரண்டு வேரியண்டுகளும் 90 முதல் 110 கிமீ வரையிலான ரேஞ்சு வழங்கக்கூடும்.

இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக், கீலெஸ் கன்ட்ரோல் உடன் புதிய கீ ஃபோப், டூயல் எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல், எல்இடி முன்பக்க விங்கர்கள், டிஜிட்டல் டிஎஃப்டி கிளஸ்ட்டர், ஆன்போர்டு நேவிகேஷன், சவுண்ட் சிஸ்டம், புளூடூத், ஆன்-ரைடு காலிங், பார்க்கிங் அசிஸ்ட், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ரிவர்ஸ் அசிஸ்ட் ஆகியவற்றை கொண்டுள்ளது.

2023 Komaki TN-95 Sport – ₹ 1,31,035 (130-150km range/charge)
2023 Komaki TN-95 Performance  – ₹ 1,39,871 (150-180km range/charge)

Tags: Electric ScooterKomaki TN 95
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Refresh
Go to mobile version