Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

2023 டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் முக்கிய சிறப்பம்சங்கள்

by automobiletamilan
April 26, 2023
in பைக் செய்திகள்
1
SHARES
0
VIEWS
ShareRetweet

tvs-raider-bike

125cc சந்தையில் மிக ஸ்டைலிஷான மாடலாக விளங்கும் ரைடர் 125 பைக் அமோக வரவேற்பினை டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்துக்கு பெற்று தந்துள்ளது. சிறப்பான எரிபொருள் சிக்கனம், ஸ்டைலிஷான் தோற்றம், கனெக்ட்டிவ் வசதி போன்றவை இளைய தலைமுறையினர் மத்தியில் நல்ல வரவேற்பினை பெறுவதற்கு முக்கிய காரணமாகும்.

சமீபத்தில் டிவிஎஸ் ரைடர் 125 பைக்கில் இடம்பெற்றுள்ள டிரம் பிரேக் வேரியண்ட் நீக்கப்பட்டுள்ளது. தற்பொழுது SX, SINGLE SEAT மற்றும் Split SEAT என மூன்று விதமாக கிடைக்கின்றது.  ஈக்கோ மற்றும் பவர் என இரு ரைடிங் மோடுகளை பெற்ற ஒரே 125cc பைக்காகும்.

Table of Contents

  • 2023 TVS Raider Specs
  • டிவிஎஸ் ரைடர் 125 வேரியண்ட்
  • டிவிஎஸ் ரைடர் மைலேஜ்
  • டிவிஎஸ் Raider 125 SmartXConnect
  • டிவிஎஸ் ரைடர் போட்டியாளர்கள்
  • டிவிஎஸ் ரைடர் ஆன்-ரோடு விலை

2023 TVS Raider Specs

TVS நிறுவனத்தின் Raider 125 பைக்கில் இடம்பெற்றுள்ள 124.8cc, சிங்கிள் சிலிண்டர், ஏர்/ஆயில்-கூல்டு என்ஜின் மூன்று வால்வுகளை பெற்றுள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 7,500RPM-ல் 11.2 bhp பவர், 6,000RPM-ல் 11.2 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. ஐந்து வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

சஸ்பென்ஷன் பொறுத்தவரை, டெலஸ்கோபிக் முன் ஃபோர்க்கு மற்றும் சரிசெய்யக்கூடிய பின்புற மோனோ ஷாக் அப்சார்பர் கொடுக்கப்பட்டுள்ளது. 17-இன்ச் அலாய் வீல்கள் கொண்டுள்ள இந்த பைக்கில் 80/100-பிரிவு முன்புற டயரும் மற்றும் 100/90-பிரிவு பின்புற டியூப்லெஸ் டயர் கொண்டுள்ளது.

2023 tvs raider 125

முன்புற டயரில் 240 மிமீ டிஸ்க் மற்றும் பின்புற டயரில் 130 மிமீ டரம் இணைக்கபட்டு கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டத்தை கொடுத்துள்ளது.

டிவிஎஸ் ரைடர் 125 வேரியண்ட்

ரைடர் 125 பைக்கில் SX, SINGLE SEAT மற்றும் Split SEAT என மூன்று விதமாக விற்பனைக்கு கிடைக்கின்றது. டாப் வேரியண்ட் மாடலாக உள்ள SX வேரியண்டில் மஞ்சள், கருப்பு நிறங்களில் SmartXonnect வசதியுடன் கூடிய TFT டிஸ்பிளே பெற்று வாய்ஸ் மற்றும் நேவிகேஷன் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது.

ரைடர் 125 Split SEAT மாடலில் மஞ்சள், நீலம், சிவப்பு, மற்றும் கருப்பு நிறங்களில் ரைடிங் மோடுகள், எல்சிடி டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்றுள்ளது.

இறுதியாக சிவப்பு நிறத்தில் மட்டும் குறைந்த விலை ஒற்றை இருக்கை வேரியண்டில் ரைடிங் மோடுகள், எல்சிடி டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்றுள்ளது.

tvs raider black

டிவிஎஸ் ரைடர் மைலேஜ்

மிக சிறப்பான மைலேஜ் வழங்கும் பைக்குகளில் ஒன்றாக விளங்குகின்ற டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் சராசரி மைலேஜ் லிட்டருக்கு 52 கிமீ முதல் 56 கிமீ வரை கிடைக்கின்றது. ஈக்கோ மோட் பயன்படுத்தும் பொழுது பவர் மிகவும் குறைவாக வெளிப்படுத்துவதனால் சற்று கூடுதலான மைலேஜை பெற முடிகின்றது.

டிவிஎஸ் Raider 125 SmartXConnect

ரைடர் 125 பைக்கில் இணைக்கப்பட்டுள்ள கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகளை புளூடூத் இணைப்பைக் கொண்ட TFT கன்சோல் ஆனது SmartXonnect உடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கிளஸ்ட்டரில் அழைப்புகள், SMS, அறிவிப்புகள், குரல் உதவி மற்றும் பிற புதுப்பிப்புகளுக்கான அணுகலை வழங்குகிறது.  முக்கியமாக டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், பயணிக்கும் திசைகளில் அருகிலுள்ள எரிபொருள் நிலையத்தை அடைய உதவுகிறது.

2023 tvs raider bike cluster

டிவிஎஸ் ரைடர் போட்டியாளர்கள்

ஹோண்டா SP125, ஹீரோ கிளாமர் 125 மற்றும் பஜாஜ் பல்சர் 125 பைக்குகளுடன் நேடியாக சந்தை பகிர்ந்து கொள்ளுகின்ற டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் மற்ற போட்டியாளர்களாகவும் ஷைன் 125, சூப்பர் ஸ்பிளெண்டர் 125 மாடல்களும் உள்ளன.

டிவிஎஸ் ரைடர் ஆன்-ரோடு விலை

சற்று கூடுதலான விலையில் அமைந்திருந்தாலும், பல்வேறு வசதிகள் மற்றும் நவீனத்துவமான டிசைன் அம்சங்கள் வாடிக்கையாளர்களை வெகுவாக கவருகின்றது. டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் ஆன்ரோடு விலை பின்வருமாறு –

2023 TVS RAIDER SX – ₹ 1,13,135

2023 TVS Raider 125 Split Seat – ₹ 1,14,435

2023 TVS Raider 125 Single Seat – ₹ 1,26,935

(தமிழ்நாடு ஆன்-ரோடு விலை பட்டியல்)

மேலும் படிக்க – 125cc பைக்குகளின் சிறப்புகள் மற்றும் ஆன்-ரோடு விலை பட்டியல்

tvs raider rear

டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் பவர் மற்றும் டார்க் விபரம் ?

டிவிஎஸ் ரைடர் 124.8cc, சிங்கிள் சிலிண்டர், ஏர்/ஆயில்-கூல்டு என்ஜின் மூன்று வால்வு என்ஜின் அதிகபட்சமாக 7,500RPM-ல் 11.2 bhp பவர், 6,000RPM-ல் 11.2 Nm டார்க் வெளிப்படுத்தும்

டிவிஎஸ் ரைடர் பைக்கின் மைலேஜ் எவ்வளவு ?

டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் சராசரி மைலேஜ் லிட்டருக்கு 52 கிமீ முதல் 56 கிமீ

டிவிஎஸ் ரைடர் பைக்கில் உள்ள வேரியண்டுகள் எத்தனை ?

ரைடர் 125 பைக்கில் SX, SINGLE SEAT மற்றும் Split SEAT என மூன்று விதமாக கிடைக்கின்றது. 

2023 டிவிஎஸ் ரைடர் பைக்கின் ஆன்ரோடு ரேட் எவ்வளவு ?

தமிழ்நாடு ஆன்-ரோடு விலை பட்டியல்
2023 TVS RAIDER SX - ₹ 1,13,135
2023 TVS Raider 125 Split Seat - ₹ 1,14,435
2023 TVS Raider 125 Single Seat - ₹ 1,26,935

 

Tags: 125cc BikesTVS Raider
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan

Go to mobile version