குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ஏதெர் 450X எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 0-100 % சார்ஜிங் பெற 15 மணி நேரமும் 20 நிமிடங்கள் தேவைப்படுவதனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஒரு விதமான தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில் ரூ.3,000-ரூ,5,000 கட்டணத்தில் வேகமான சார்ஜிங் வசதியை பெற முடியுமா? என்ற கேள்விக்கு ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள ஏதெர் தலைமை செயல் அதிகாரி தருன் மெகத்தா கூறுகையில், ரூ.5,000 விலைக்குள் எங்களால் சற்று வேகமாக சார்ஜ் ஏறும் வசதியை தருவது சாத்தியமில்லாத ஒன்று, ஆனால் சற்று கூடுதலான விலையில் இதனை எதிர்காலத்தில் வேகமாக சார்ஜிங் செய்யும் வகையில் வழங்குவோம் என குறிப்பிட்டுள்ளார்.
Ather 450X Vs Ather 450X pro pack
இரு வேரியண்டுகளும் பொதுவாக 3.7 kWh லித்தியம் ஐயன் பேட்டரி பொருத்தப்பட்டு 6.4 kW பவரை வெளிப்படுத்தி அதிகபட்சமாக 26 Nm டார்க் வழங்குகின்றது.
அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 146 கிமீ வழங்கும் என சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. நிகழ்நேரத்தில் முழுமையான சார்ஜில் 100 கிமீ வரை வழங்கும்.
இரண்டு மாடல்களிலும் உள்ள முதல் வித்தியாசம் என்னவென்றால் ரைடிங் மோடு ஆகும். குறைந்த விலை வேரியண்டில் ஒற்றை ரைடிங் மோடு மட்டுமே உள்ளது. ஏதெர் 450X புரே பேக் பெற்ற மாடலில் Warp, Sport, Ride, Eco, மற்றும் SmartEco போன்ற ரைடிங் மோடுகள் உள்ளன.
குறிப்பாக ஏதெர் ஸ்கூட்டரின் மிக சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துதே இந்த Warp மோட்தான், இதன் மூலம் பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு சவால் விடுக்கும் செயல்திறனை வழங்குகின்றது.
சார்ஜிங் ஆகின்ற நேரம் பற்றி ஒப்பீடுகையில்,குறைவான விலை பெற்ற வேரியண்ட் வீட்டு சார்ஜரில் சார்ஜ் ஏறுவதனால் முழுமையாக சார்ஜ் செய்ய, 15 மணிநேரம் 20 நிமிடங்கள் ஆகும். ஆனால் ProPack வேரியண்ட் வீட்டு சார்ஜரில் 5 மணி 40 நிமிடங்களில் முழுமையான சார்ஜ் அடையும். கூடுதலாக ஏதெர் க்ரீட் மூலம் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி பெற்றுள்ளது.
குறிப்பாக, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, ஸ்மார்ட் கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் ஆன் போர்டு நேவிகேஷன், கனெக்டேட் மொபைல் ஆப், TPMS, ம்யூசிக் மற்றும் அழைப்புகள், கலர் டிஸ்பிளே என பலவற்றை பெற்றதாக ஏதெர் 450X புரே பேக்கில் இடம்பெற்றுள்ளது. ஆனால் குறைவான விலையில் கிடைக்கின்ற மாடலில் இந்த வசதிகள் இல்லை.
அடுத்து வாரண்டி தொடர்பான ஒப்பீடுகையில் , புரோ பேக் ஆப்ஷனாலாக பெறுவபவர்களுக்கு 5 வருடம் அல்லது 60,000 கிமீ பேட்டரி வாரண்டி உள்ளது. ஆனால் மற்றவர்களுக்கு பொதுவாக வாகனம், பேட்டரிக்கு வாரண்டி 3 வருடம் அல்லது 30,000 கிமீ மட்டுமே ஆகும்.
இறுதியாக விலை ஒப்பீட்டுகையில் ரூ.30,000 வரை குறைவாக உள்ளது.
ஏதெர் 450X விலை ₹ 1,16,379
ஏதெர் 450X Pro-Packed விலை ₹ 1,46,743