இந்திய சந்தையில் வெளியிடப்பட்டுள்ள புதிய ஏத்தர் 450 எக்ஸ் Vs டிவிஎஸ் ஐகியூப் Vs பஜாஜ் சேட்டக் என மூன்று மாடல்களையும் ஒப்பீடு செய்து அதன் நுட்பவிபரங்கள் மற்றும் சிறப்புகளை அறிந்து கொள்ளலாம்.
மூன்று மாடல்களின் பெர்ஃபாமென்ஸ், ரேஞ்சு, பேட்டரி திறனுடன் பல்வேறு வசதிகளை பற்றியும் இங்கே ஒப்பீட்டு காணலாம். பொதுவாக மூன்று மின்சார ஸ்கூட்டர்களும் குறிப்பிட்ட சில மெட்ரோ நகரங்களில் மட்டும் கிடைக்கின்றது. முந்தைய 450 மாடலை விட மேம்பட்டதாக வந்துள்ள மாடல்தான் ஏதெர் 450 எக்ஸ் ஸ்கூட்டராகும். கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை பொறுத்தவரை மூன்றுமே பல்வேறு நவீனத்துவமான வசதிகளை கொண்டுள்ளன.
எலெக்ட்ரிக் மோட்டார் & டார்க்
மற்ற இரு மாடல்களை விட அதிகபட்ச திறன் பெற்ற 6 Kw (5.4kW பிளஸ் வேரியண்ட்) எலெக்ட்ரிக் மோட்டாரை ஏத்தர் 450 எக்ஸ் பெறுகின்றது. அடுத்தபடியாக டிவிஎஸ் ஐ-க்யூப் ஸ்கூட்டரில் 4.5 Kw மின் மோட்டாரும், சேட்டக்கில் 4.08 Kw மின்சார மோட்டாரும் பொருத்தப்பட்டுள்ளது.
ஏத்தர் 450x | டிவிஎஸ் iQube | சேட்டக் | |
மோட்டார் | 6 kW (5.4kW) | 4.5kW | 4.08kW |
டார்க் | 26 Nm (22 Nm) | 140Nm (சக்கரத்தில்) | 16Nm |
(அடைப்பிற்குள் பிளஸ் வேரியண்ட்)
ரேஞ்சு, பேட்டரி மற்றும் சார்ஜிங் விபரம்
சேட்டக் மற்றும் ஏதெர் 450 எக்ஸ் என இரு மாடல்களுமே ஃபாஸ்ட் சார்ஜிங் முறையை ஆதரிக்கின்றது. குறிப்பாக சேட்டக் மாடலை விட ஏத்தர் 450 எக்ஸ் மிக வேகமாக ஒரு நிமிடத்தில் 1.45 கிமீ சார்ஜ் பெறும் திறனை கொண்டுள்ளது. டிவிஎஸ் ஐக்யூப் ஃபாஸ்ட் சார்ஜரை பெறவில்லை. இந்த இரு ஸ்கூட்டர்களில் குறைவான அதிகபட்ச வேகத்தை சேட்டக் கொண்டுள்ளது. அதேவேளை நிறுவனத்தின் நுட்பவிபரத்தின்படி 95 கிமீ பயணிக்கும் திறனை வழங்குகின்றது. டிவிஎஸ் ஐகியூப் மணிக்கு 78 கிமீ வேகத்தை பெறுகின்றது. மற்ற இரண்டு மாடல்களை விட 450எக்ஸ் அதிகபட்சமாக மணிக்கு 80 கிமீ வேகத்தை எட்டுகின்றது.
சேட்டக் மற்றவற்றை விட அதிகபட்ச திறன் வாய்ந்த 3 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்டுள்ளது.
ஏத்தர் 450 எக்ஸ் | டிவிஎஸ் ஐகியூப் | சேட்டக் | |
பேட்டரி | 2.61kWh | 2.2kWh | 3kWh |
Range | 85km இக்கோ மோட் | 75 km இக்கோ மோட் | 95km இக்கோ மோட் |
70km ஸ்போர்ட் மோட் | 55km இக்கோ மோட் | ||
சார்ஜிங் நேரம் | 5 மணி நேரம் (Dot) 4.20 மணி நேரம் 0-80% |
5 மணி நேரம் (5amp சாக்கெட்) | 5 மணி நேரம் (5amp சாக்கெட்) |
ஃபாஸ்ட் சார்ஜ் | 1 நிமிடத்தில் 1.45 கிமீ சார்ஜிங் திறன் | —— | 1 மணி நேரம் – 80 சதவீதம் |
கனெக்ட்டிவிட்டி வசதிகள்
மூன்று ஸ்கூட்டர்களுமே சிறப்பான ஸ்மார்ட்போன் இணைப்பு சார்ந்த வசதிகளையும் வழங்குகின்றன. குறிப்பாக ஐ-க்யூப் மற்றும் ஏதெர் 450 என இரு மாடல்களும் சேட்டக்கை விட கூடுதலாக நேவிகேஷன், குறிப்பிட்ட எல்லையில் மட்டும் பயணிக்க அனுமதி வழங்கும் ஜியோ ஃபென்சிங் போன்றவற்றை பெறுகின்றது.
சேட்டக், ஐக்யூப் என இரு மாடலும் முன்புறத்தில் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் வசதி, சேட்டக்கில் அர்பேன் குறைந்த விலை மாடலில் இரு புறமும் டிரம் பிரேக், ஏத்தர் 450 எக்ஸ் மாடலில் இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது.
விலை ஒப்பீடு
விலை பட்டியல் | ஏத்தர் 450 எக்ஸ் | பஜாஜ் சேட்டக் | டிவிஎஸ் ஐகியூப் |
ரூ. 1.49 லட்சம் (பிளஸ்) | ரூ. 1 லட்சம் (Urbane) | ரூ. 1.15 லட்சம் (ஆன்-ரோடு பெங்களூரு) | |
ரூ. 1.59 லட்சம் (ப்ரோ) | ரூ. 1.15 லட்சம் (Premium) |
விலையை பொறுத்தவரை ஏத்தர் 450 எக்ஸ் மாடலுக்கு இரண்டு விதமான ஆப்ஷன் உள்ளது. ஒன்று மேலே வழங்கப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை, மற்றொன்று ஏதெர் 450 எக்ஸ் விலை ரூ.99,000 (எக்ஸ்ஷோரூம்) ஆகும். இந்த வாங்கும் முறையில் மாதந்தோறும் சந்தா கட்டணமாக பிளஸ் வேரியண்டிற்கு ரூ.1,699 மற்றும் ப்ரோ வேரியண்டிற்கு ரூ.1,999 செலுத்த வேண்டும்.
ஏத்தர் 450 எக்ஸ் பிளஸ் Vs ஏத்தர் 450 எக்ஸ் ப்ரோ – ஒப்பீடு
நுட்பவிபரம் |
Plus pack |
Pro pack |
விலை |
ரூ. 1,699 மாதம் |
ரூ. 1,999 மாதம் |
பேட்டரி |
2.4kWh |
2.61kWh |
பவர் |
5.4kW |
6kW |
டார்க் |
22Nm |
26Nm |
அதிகபட்ச வேகம் |
80kmph |
80kmph |
0-40 kmph |
3.9 seconds |
3.4 seconds |
ரேஞ்சு |
65km (Ride), 75km (Eco) |
70km (Ride), 85km (Eco) |
வேகமான சார்ஜ் 0-100 per cent |
1km/min 5hr 45min |
1.45km/min 5hr 45min |