ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின் மிக வேகமான மற்றும் பிரீமியம் வசதிகளை பெற்ற 450 அபெக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையை ரூ.6,000 வரை உயர்ந்துள்ளதால் புதிய எக்ஸ்ஷோரூம் சென்னை விலை ரூ.1,94,945 லட்சம் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு எடிசனாக இந்நிறுவனத்தின் 10 ஆண்டுகால கொண்டாட்டத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட 450 அபெக்சில் விற்பனையில் இருக்கின்ற 450 சீரியஸ் ஸ்கூட்டர் மாடல்களிலும் இருந்து பெறப்பட்ட பல்வேறு அம்சங்களை கொண்டிருந்தாலும் சில கூடுதல் வசதி அதிகபட்ச வேகம் மணிக்கு 100 கிமீ உள்ளிட்ட காரணத்தால் கவனத்தை பெற்றுள்ளது.
இந்த மாடல் வரும் செப்டம்பர் மாதம் வரை மட்டுமே உற்பத்தி செய்யப்பட உள்ள நிலையில், இதனை பெற முன்கூட்டியே முன்பதிவு செய்தால் மட்டும் தயாரிக்கப்படுகின்றது.
ஸ்மார்ட் ஈக்கோ, ரைட், ஸ்போர்ட் மற்றும் ரேப்+ ஆகிய ரைடிங் மோடுகள் பெற்றுள்ள மாடலில் குறைந்த வேகம் அதிக ரேஞ்ச் வழங்குகின்ற ஸ்மார்ட் ஈக்கோ மோடில் நிகழ் நேரத்தில் ரேஞ்ச் 110 கிமீ வரை வெளிப்படுத்துவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அபெக்ஸ் 157 கிமீ ரேஞ்ச் வழங்கும் சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. புதிதாக இணைக்கப்பட்டுள்ள Wrap+ மோடில் பயணித்தால் ரேஞ்ச் 75 கிமீ வழங்கும் என குறிப்பிட்டுள்ளது.
சமீபத்தில் இந்நிறுவனம் குடும்பங்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ரிஸ்டா என்ற ஸ்கூட்டரையும் விற்பனைக்கு வெளியிட்டிருக்கின்றது.
Ather 450 Apex onroad Price in All over Tamil Nadu – ₹ 2,03,460
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்டு முற்றிலும் நவீனத்துவமான ரெட்ரோ டிசைன் அமைப்பினை கொண்ட 2024 டெஸ்டினி 125 மாடலை…
ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா 350, 42 FJ, 42, பெராக் மற்றும் 42…
கியா நிறுவனம் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் விற்பனைக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில்…
ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் ஆரா செடான் காரின் ஆரம்ப நிலை E வேரியன்டிலும் தற்பொழுது சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.…
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் வெனியூ எஸ்யூவி மாடலில் E+ என்ற வேரியண்டில் சன்ரூஃப் வசதியை கொண்டு வந்துள்ளது.…
துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்ட்ர் காரில் இரண்டு சன்ரூஃப் பெற்ற வேரியண்டுகள் குறைவான விலையில்…