Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ஜனவரி 15.., ஹோண்டா ஆக்டிவா 6ஜி விற்பனைக்கு வெளியாகிறது

by automobiletamilan
January 3, 2020
in பைக் செய்திகள்

வரும் ஜனவரி 15 ஆம் தேதி விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரில் இடம்பெற உள்ள பிஎஸ் 6 என்ஜின் பவர் விபரம் மற்றும் முக்கியமாக இடம் பெற உள்ள வசதிகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

பிஎஸ் 6 என்ஜினை பெற உள்ள ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர், தற்போது விற்பனையில் கிடைக்கின்ற பிஎஸ்4 மாடலை விட குறைந்த பவர் வெளிப்படுத்துவது உறுதியாகியுள்ளது. டார்க்கில் எந்த மாற்றங்களும் இருக்க வாய்ப்பில்லை. தற்போது கிடைத்துள்ள விபரங்களின் படி ஆக்டிவா 6G ஸ்கூட்டரில் 109.51சிசி Fi என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 8000 rpm -ல் 5.78 Kw அல்லது 7.68 bhp பவரை வழங்குவது உறுதியாகியுள்ளது. முன்பாக பிஎஸ் 4 என்ஜின் 7500 rpm -ல் 5.86 kW or 8 BHP பவர் வழங்கியது குறிப்பிடதக்கதாகும்.

சமீபத்தில் விற்பனைக்கு கிடைக்கின்ற பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணக்கமான எஸ்பி 125 மற்றும் ஆக்டிவா 125 மாடல்களில் இடம்பெற்ற ஹோண்டாவின் esp (Enhanced Smart Power) நுட்பத்தின் மூலம் சிறப்பான முறையில் மேம்படுத்தப்பட்ட என்ஜினை பெற்றுள்ளது. இந்த நுட்பம் PGM-FI, குறைந்த உராய்வு மற்றும் ACG ஸ்டார்டர் என மூன்று அம்சங்களை உள்ளடக்கியதாக ஆக்டிவா 6G மாடலும் வரவுள்ளது.

முழுமையான எல்இடி ஹெட்லைட் மற்றும் எல்இடி டெயில் லைட் போன்றவற்றுடன் தோற்ற அமைப்பில் சிறிய அளவிலான மாற்றங்களை பெறுவதுடன், பிஎஸ்6 ஆக்டிவா ஸ்கூட்டரை போன்றே டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் கிளஸ்ட்டரை பெற வாய்ப்புகள் உள்ளது. எனவே, இந்த ஸ்கூட்டரிலும் பெட்ரோல் இருப்பை அறிந்து கொள்வதுடன், சராசரி மைலேஜை கொண்டு எத்தனை கிலோ மீட்டர் பயணிக்க இயலும் என்பதனை நிகழ்நேரத்தி அறிது கொள்ளுகின்ற வசதியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கூடுதலாக புதிய நிறங்கள் சிறிய அளவிலான பாடி கிராபிக்ஸ் மாற்றங்களை பெற்றிருக்கும்.

ஆக்டிவா 5ஜி மாடலை விட 6ஜி ஸ்கூட்டரின் நீளம் உயரம் மற்றும் அகலம் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. குறிப்பாக இந்த ஸ்கூட்டரின் வீல்பேஸ் முந்தைய மாடலை விட 22 மிமீ வரை அதிகரிக்கப்பட்டு 1260 மிமீ வரை உயர்த்தப்பட்டுள்ளது.

மாடல் ஹோண்டா Activa 6G ஹோண்டா Activa 5G
நீளம் 1,833 mm 1,761 mm
அகலம் 697 mm 710 mm
உயரம் 1,156 mm 1,158 mm
வீல்பேஸ் 1,260 mm 1,238 mm

 

ஹோண்டாவின் ஆக்டிவா 125 மற்றும் எஸ்பி 125 என இரு மாடல்களும் பிஎஸ்6 முறையில் 60,000க்கு அதிகமான வாகனங்களை விநியோகம் செய்துள்ளது.

விற்பனையில் கிடைக்கின்ற பிஎஸ்4 மாடலை விட ரூ.6,000 வரை விலை அதிகரிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. வரும் ஜனவரி 15 ஆம் தேதி விற்பனைக்கு வெளியிடப்படுவதனால் இந்த மாத இறுதியில் டெலிவரி வழங்கப்படலாம்.

Tags: Honda Activa 6Gஹோண்டா ஆக்டிவா 6ஜி
Previous Post

இன்று.., மாலை 6 மணி முதல் ஜாவா பெராக் முன்பதிவு ஆரம்பம்

Next Post

ஆரா செடான் காருக்கு முன்பதிவை துவங்கிய ஹூண்டாய்

Next Post

ஆரா செடான் காருக்கு முன்பதிவை துவங்கிய ஹூண்டாய்

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version