முக்கிய குறிப்பு
  • பஜாஜ் பல்சர் 150 நியான் விலை ரூ.5,000 வரை உயர்ந்துள்ளது.
  • டிசைனில் எந்த மாற்றமும் இல்லை, பாடி கிராபிக்ஸ் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
  • 14 ஹெச்பி பவரை வழங்கும் 149.5சிசி பிஎஸ்-6 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

பிஎஸ்-6 இன்ஜின் பெற்ற பஜாஜ் ஆட்டோவின் பல்சர் 150 நியான் பைக்கின் விலை ரூ.5,000 வரை உயர்த்தப்பட்டு இப்போது ரூ.91,795 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிஎஸ்-6 மாற்றத்துக்கு பிறகு மீண்டுமொரு முறை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் பெரும்பாலான பிஎஸ்-6 மாடல்கள் விலை உயர்வை சந்தித்து வரும் நிலையில் அவென்ஜர் 220 க்ரூஸர் மாடல் ரூ.2,500 வரை விலை உயர்ந்துள்ளது.

14 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 13.4 என்எம் இழுவைத் திறன் வழங்கும் 149.5சிசி இரு வால்வுகளை கொண்ட இரட்டை ஸ்பார்க் பிளக் பெற்ற மாடலாக விளங்குகின்றது.

முன்புறத்தில் 240 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் பெற்றுள்ள இந்த மாடலில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குடன், பின்புறத்தில் 5 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான ஷாக் அப்சார்பர் பெற்றுள்ளது.

முந்தைய மாடலை விட சற்று கிராபிக்ஸ் அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு, என்ஜின் கவுல் இணைக்கப்பட்டுள்ளது. மற்றபடி நியான் சிவப்பு, நியான் சில்வர் மற்றும் நியான் லைம் க்ரீன் நிறங்களில் கிடைக்கின்றது.