Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

பிஎஸ்6 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விற்பனைக்கு வெளியானது

by automobiletamilan
January 7, 2020
in பைக் செய்திகள்

bs6 royal enfield classic 350 Chrome Black

விற்பனையில் உள்ள மாடலின் அடிப்படையில் மேம்பட்ட பிஎஸ்6 என்ஜினை பெற்ற ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக் விலை ரூ.1,65,025 (எக்ஸ்ஷோரூம்) நிர்ணையிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்4 மாடலை விட ரூ.11,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

பிஎஸ்4 350சிசி என்ஜினில் கார்புரேட்டர் பயன்படுத்தப்பட்ட நிலையில், இனி எஃப்ஐ பெற்றதாக விற்பனைக்கு கிடைக்க உள்ளது. ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் பெற்றுள்ளதால் பவர் சற்று குறைந்திருக்க வாய்ப்புகள் உள்ளது. ஆனால் தற்போது பவர் விபரங்கள் வெளியாக வில்லை. 19.8 bhp பவர் , 28 Nm டார்க் வழங்கவல்லதாகவும், 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

பாரத் ஸ்டேஜ் 6 என்ஜினை பெற உள்ள கிளாசிக் 350 பைக்கில் புதிய பாடி ஸ்டிக்கரிங், கூடுதலாக ஸ்டெல்த் பிளாக் மற்றும் க்ரோம் எடிசன் என இரு நிறங்களையும் கிளாசிக் 350 பைக்கிலும் வரவுள்ளது. இதுதவிர, பெட்ரோல் கலனில் ராயல் என்ஃபீல்டு பேட்ஜ் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும் சில மெக்கானிக்கல் மேம்பாடுகள் வழங்கப்பட்டு ஃபைனல் டிரைவ் இடம் மாற்றப்பட்டு , அலாய் வீல் மற்றும் டிஸ்க் பிரேக் பெற்றுள்ளது. மேலும் பைக்கின் இருக்கை அமைப்பில் சிறிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக புதிய என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்கில் அலாய் வீல் மற்றும் டியூப்லெஸ் டயர் நிரத்தர அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விலை முன்பாக டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்டதாகும். சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பெற்ற மாடல் விலை விரைவில் அறிவிக்கப்படலாம். கூடுதலாக பிஎஸ் 6 கிளாசிக் 350 பைக்குகளக்கு மூன்று வருட வாரண்டி மற்றும் மூன்று வருட சாலையோர உதவி (RSA) வசதியை வழங்குவதாக அறிவித்துள்ளது.

நிறங்கள் விலை (BS-VI) விலை (BS-IV) வித்தியாசம்
Classic Black ரூ. 1,65,025 ரூ. 1,53,903 ரூ. 11,122
Gunmetal Grey ரூ. 1,69,791 ரூ. 1,55,740 ரூ. 14,051
Signals Stormrider Sand ரூ. 1,75,281 ரூ. 1,64,095 ரூ.11,186
Signals Airborne Blue ரூ. 1,75,281 ரூ. 1,64,095 ரூ.11,186
Stealth Black ரூ. 1,81,728 NA NA
Chrome Black ரூ. 1,81,728 NA NA

 

(எக்ஸ்ஷோரூம்)bs6 royal enfield classic 350 Stealth Black

 

Tags: Royal Enfield Classic 350ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version