டுகாட்டி மான்ஸ்டர் 797 பிளஸ் விற்பனைக்கு வெளியானது

டுகாட்டி நிறுவனத்தின் மான்ஸ்ட் 25 ஆண்டு கால கொண்டாட்டத்தை முன்னிட்டு டுகாட்டி மான்ஸ்டர் 797 பிளஸ் பைக் கூடுதலான வசதிகளை பெற்றதாக ரூ. 8.03 லட்சம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டுகாட்டி மான்ஸ்டர் 797 பிளஸ்

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற டுகாட்டி மான்ஸ்டர் 797 மாடலை விட ரூ. 30,000 வரை விலை அதிகரிக்கப்பட்டு இரண்டு புதிய நிரந்தர ஆக்செரிஸ்களாக ஃபிளை ஸ்கிரின் மற்றும் ரியர் கவுல் ஆகியவற்றை மட்டும் பெற்றுள்ளது.

மான்ஸ்டர் 797 பிளஸ் மாடலில் L – ட்வீன் 803 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு 73 பிஹெச்பி ஆற்றல் மற்றும் 67 என்எம் டார்க் வழங்குவதுடன் 6 வேக கியர்பாக்ஸ் பெற்ற இந்த பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் பெற்று முன்புறத்தில் 43mm Kayaba யூஎஸ்டி ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரை பெற்று விளங்குகின்றது.

இந்தியாவில் உள்ள டுகாட்டி டீலர்கள் வாயிலாக முன்பதிவு தொடங்கப்பட்டுள்ள மாடல் விரைவில் டெலிவரி செய்யப்பட உள்ளது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட டுகாட்டி மான்ஸ்டர் 821 பைக்கின் டெலிவரி நொடங்கப்பட்டுள்ளது.