கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பாக அறிமுகம் செய்யப்பட்ட ஜாவா பெராக் தற்போது. ரூ.6,000 வரை விலை உயர்த்தப்பட்டு ரூ1.95 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. பிஎஸ்6 மாசு உமிழ்வுக்கு இணைக்கமான 334சிசி என்ஜினை பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் மஹிந்திரா நிறுவனத்தால் ஜாவா மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டு ஒராண்டு நிறைவுற்றதை ஒட்டி இன்றைக்கு நடைபெற்ற விழாவில் பாபர் ஸ்டைல் ஜாவா பெராக் வெளியிடப்பட்டது. மேலும் இந்த பைக்கிற்கான முன்பதிவு ஜனவரி 1, 2020 முதல் துவங்குவதுடன், டெலிவரி ஏப்ரல் 2020 முதல் தொடங்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
கடந்த ஆண்டே காட்சிப்படுத்தப்பட்ட ஜாவா பெராக் மாடல் பாபர் ஸ்டைலில் அமைந்திருப்பதுடன் தற்போது இடம்பெற்றுள்ள ஜாவா , ஜாவா 42 மாடலிகள் உள்ள 293 சிசி என்ஜினுக்கு மாற்றாக 334 சிசி என்ஜின் பொருத்தப்பட உள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 31 ஹெச்பி பவர் மற்றும் 31 என்எம் டார்க் வெளிப்படுத்துகிறது.
வட்ட வடிவிலான முகப்பு விளக்கு, பக்கவாட்டில் இருக்கும் டூல் பாக்ஸ், பெரும்பாலான பாகங்களுக்கு க்ரோம் பூச்சூ, அகலமான பின்புற மட்கார்டு ஆகியவற்றை பெற்றுள்ள இந்த மோட்டார்சைக்கிள்களில் டபூள் கார்டில் அடிச்சட்டத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டு முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குடன், பின்புறத்தில் ட்வின் ஷாக் அப்சார்பரை பெற்று டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் கூடிய முன்புறத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.
(ex-showroom Delhi)