Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் டிசம்பரில் அறிமுகமாகிறது – இஐசிஎம்ஏ 2019

by automobiletamilan
November 5, 2019
in பைக் செய்திகள்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

KTM 390 Adventure

நீண்ட கால காத்திருப்புக்குப் பின்னர் புத்தம் புதிய ஆஃப் ரோடு பயணத்திற்கு ஏற்ற கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் மாடலை இஐசிஎம்ஏ மோட்டார் சைக்கிள் கண்காட்சியில் கேடிஎம் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இஐசிஎம்ஏ 2019 அரங்கில் உயர் ரக கேடிஎம் 1290 சூப்பர் டியூக் ஆர், கேடிஎம் 890 டியூக் ஆர் போன்ற மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய அளவில் விற்பனை செய்யப்படுகின்ற ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன், கவாஸாகி வெர்சிஸ் X-300 மற்றும் பிஎம்டபிள்யூ 310 GS  போன்ற மாடல்களை எதிர்கொள்ள உள்ள புதிய அட்வென்ச்சர் 390 மாடலில் ஆர்சி 390 மற்றும் 390 டியூக் போன்ற மாடல்களில் பயன்படுத்தப்பட்ட அதே என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக் இந்தியன் பைக் வாரத்தில் டிசம்பர் மாத தொடக்கத்தில் முதன்முறையாக இந்திய சந்தையில் வெளியிடப்பட உள்ளது. அதனை தொடர்ந்து சர்வதேச அளவில் விற்பனைக்கு செல்ல உள்ளது.

யூரோ 5 / பிஎஸ் 6 இணக்கமான என்ஜின் பொருத்தப்பட்டு 9,500 ஆர்பிஎம் சுழற்சியில் 43 பிஎஸ் அதிகபட்ச சக்தியையும், 7,250 ஆர்பிஎம் சுழற்சியில் 37 என்எம் டார்க்கையும் வழங்க வல்லதாகும். 6 வேக டிரான்ஸ்மிஷன் பெற உள்ளது. கே.டி.எம் 390 அட்வென்ச்சர் பைக் புனேவுக்கு அருகிலுள்ள பஜாஜின் சக்கான் ஆலையில் தயாரிக்கப்பட உள்ளது.

மிக சிறப்பான ட்ரெயின் பயணத்திற்கு ஏற்ப 170 மிமீ பயணிக்கும் தன்மையுடன் வடிமைக்கப்பட்ட இன்வெர்டேட் முன்புற ஃபோர்க் சஸ்பென்ஷன் மற்றும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இவை இரண்டுமே WP நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டுள்ளது.  முன்புறத்தில் 19 அங்குல வீல் மற்றும் 17 அங்குல பின்புற அலாய் மற்றும் வீல்களை கொண்டுள்ளது. ஆன்ரோடு மற்றும் ஆஃப்ரோடு பயணத்துக்கு ஏற்ப டயரினை கொண்டுள்ளது.. பிரேக்குகளில் ரேடியல் காலிபருடன் கூடிய 320 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 230 மிமீ டிஸ்க் ஆகியவை பெற்றுள்ளது.

b89f1 ktm 390 adventure

சர்வதேச அளவில் விற்கப்படுகின்ற 790 அட்வென்ச்சர் மாடலுக்கு இணையான தோற்ற பொலிவினை கொண்டுள்ளது. விண்ட்ஸ்கிரீனால் மூடப்பட்ட எல்இடி ரன்னிங் விளக்குடன் கேடிஎம்-யின் வழக்கமான இரு பிரிவுகளை பெற்ற எல்இடி ஹெட்லேம்பைப் பெறுகிறது. இந்தியாவில் கேடிஎம் 390 அட்வென்ச்சர் மாடல் ரூ. 3 லட்சத்தில் விற்பனைக்கு வெளியாகலாம்.

64c5f ktm 390 adventure specs 148a5 ktm 390 adventure bike 9d146 ktm 390 adventure features c9eaf ktm 390 adventure instrument cluster

Tags: EICMAKTM 390 Adventureகேடிஎம் 390 அட்வென்ச்சர்
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Refresh
Go to mobile version