ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் SP 160 பைக் மாடலை விற்பனைக்கு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிதாக வரவுள்ள மாடல் 150cc-160cc வரையில் உள்ள பைக்குகளுக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்திருக்கும்.
ஏற்கனவே, சந்தையில் உள்ள ஹோண்டா யூனிகார்ன் 160 பைக்கில் உள்ள என்ஜினை புதிய எஸ்பி 160 பைக் வரவுள்ளது. இந்த மாடலின் டிசைன் அம்சங்கள் ஏற்கனவே விற்பனையில் உள்ள எஸ்பி 125 அடிப்படையில் இருக்கலாம்.
Honda SP 160 launch soon
யூனிகார்ன் 160 பைக்கில் பொருத்தப்பட்டுள்ள OBD2 மற்றும் E20 எரிபொருளுக்கு ஏற்றதாக தயாரிக்கப்பட்டுள்ள HET (Honda Eco Technology) நுட்பத்தினை பெற்று 162.71cc என்ஜின் அதிகபட்சமாக 7,500rpm-ல் 12.9 hp பவர், 14 NM டார்க் ஆனது 5500rpm-ல் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொடுக்கபட்டுள்ளது.
17 அங்குல வீல் பெற்று இருபக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் கொண்ட வேரியண்ட் மற்றும் பின்புறத்தில் டிரம் பெற்ற குறைந்த விலை வேரியண்ட் என இரண்டு விதமாக வெளியிடப்படலாம்.
தற்பொழுது ஹோண்டா யூனிகார்ன் 160 பைக்கின் விலை ரூ.1.10 லட்சத்தில் கிடைக்கின்ற நிலையில் புதிய ஹோண்டா SP 160 பைக்கின் விலை ரூ.1.15 லட்சத்தில் துவங்கலாம். இந்த மாடல் விற்பனைக்கு வரும் பொழுது எக்ஸ்-பிளேடு நீக்கப்படலாம்.