Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

விரைவில்., சுசுகி ஜிக்ஸர் SF 250 மோட்டோ ஜிபி எடிஷன் அறிமுகம்

by automobiletamilan
July 21, 2019
in பைக் செய்திகள்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

MotoGP edition of GIXXER SF Series

சமீபத்தில் 2019 சுசுகி ஜிக்ஸர் SF 155 மோட்டோ ஜிபி மாடலை தொடர்ந்து சுசுகி ஜிக்ஸர் SF 250 மோட்டோ ஜிபி வெர்ஷன் விரைவில் விற்பனைக்கு வெளியிடுவதாக அறிவித்துள்ளது. விற்பனையில் உள்ள சாதாரன மாடலை விட ரூ.1000 வரை விலை அதிகரிக்கப்பட்டிருக்கும்.

இந்திய சாலைகளுக்கு ஏற்ப செயல்படும் வகையிலான சுசுகி ஆயில் கூலிங் சிஸ்டம் (SOCS – Suzuki Oil Cooling System) நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக இணைக்கப்பட்டிருக்கும் எஸ்ஓசிஎஸ் மூலம் வாகனத்தின் எடை அதிகரிக்காமல் இலகு எடையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

249சிசி SOHC , 4 வால்வுகளை பெற்ற ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கின்றது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 26.5 ஹெச்பி பவரும் மற்றும் 22.6Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பெற்றிருக்கின்றது. சுஸூகி ஜிக்ஸர் SF 250 பைக் மைலேஜ் லிட்டருக்கு 38.5 கிமீ ஆகும்.

மூன்று பிரிவுகளை பெற்ற எல்இடி ஹெட்லைட் யூனிட், ஸ்டைல் அம்சங்கள் உட்பட எல்இடி டெயில்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் பல்வேறு நவீன வசதிகள் மற்றும் ஸ்மார்ட்போனை இணைக்கும் அம்சத்துடன் டைமன்ட் கட் ஃபினிஷ் பெற்ற மல்டி ஸ்போக் அலாய் வீல் பெற்றுள்ளது.

மோட்டோ ஜிபி பதிப்பு சுசுகியின் பந்தய பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் நோக்கில், 2015 ஆம் ஆண்டில் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. வசீகரிக்கும் மோட்டோ ஜிபி வண்ணம் இந்தியாவில் ஜிக்ஸ்சர் எஸ்எஃப் தொடரின் மிக முக்கிய அடையாளமாக மாறியுள்ளது. டீம் சுசுகி எக்ஸ்டார் பாடி கிராபிக்ஸ் முதல் தனித்துவமான பல்வேறு அம்சங்களை இந்த பைக் பெற்றிருக்கும்.

தற்போது 2019 சுசுகி ஜிக்ஸர் SF 250 பைக் விலை ரூ.1.70 லட்சம் என விற்பனை செய்யப்படுகின்றது. ரூ.1.71 லட்சம் விலையில் மோட்டோ ஜிபி சுசுகி ஜிக்ஸர் SF 250 கிடைக்க உள்ளது.

Tags: Suzuki Gixxer SF 250சுசுகி ஜிக்ஸர் SF 250
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan