2023 ஜூன் மாதம் விற்பனைக்கு வெளியான பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களை பற்றி சுருக்கமாக அறிந்து கொள்ளலாம். ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி, ஹோண்டா டியோ, பேஷன் பிளஸ், யூனிகான் 160, நிஞ்ஜா 300, ஷைன் 125 ஆகியவை வெளியிடப்பட்டுள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப்
நாட்டின் முதன்மையான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், எச்எஃப் டீலக்ஸ், பேஷன் பிளஸ் மற்றும் எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது. 4 வால்வுகளை பெற்ற எக்ஸ்ட்ரீம் 160R 4V பைக் விலை ரூ.1,27 லட்சம் முதல் ரூ.1.37 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மீண்டும் விற்பனைக்கு வந்துள்ள பேஷன் பிளஸ் பைக் 100cc என்ஜின் பெற்றதாக ரூ.75,691 விலையில் வந்துள்ளது. அடுத்து, பிரசத்தி பெற்ற எச்எஃப் டீலக்ஸ் கேன்வாஸ் கருப்பு நிறத்தை கொண்டு OBD2 மற்றும் E20 பெற்றதாக வந்துள்ளது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள்
OBD2 மற்றும் E20 மேம்பாடு பெற்ற ஹோண்டா யூனிகான் 160 பைக் மற்றும் ஷைன் 125 என இரு மாடல்களும் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட ஹோண்டா டியோ 110 ஸ்கூட்டர் மாடல் எச்-ஸ்மார்ட் ரிமோட் கன்ட்ரோல் வசதி பெற்றதாக விற்பனைக்கு வந்துள்ளது. கூடுதல் நிறங்கள், அலாய் வீல், பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கேடிஎம்
டியூக் 200 பைக்கில் கூடுதலாக எல்இடி ஹெட்லேம்ப் பெற்ற 2023 கேடிஎம் 200 டியூக் பைக்கில் ரூ1.96 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ட்ரையம்ப்
ட்ரையம்ப் நிறுவனம், இந்தியாவில் ஸ்டீரிட் டிரிபிள் 765 மாடல் லிக்யூடு கூல்டு, 765cc, மூன்று சிலிண்டர் எஞ்சின் ஆனது R மற்றும் RS என இரண்டிற்கும் மாறுபட்ட பவரை வழங்குகின்றது.
சுசூகி
சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் V-Strom SX, ஜிக்ஸர் 250, ஜிக்ஸர் SF 250 மற்றும் பர்கெமென் EX ஸ்கூட்டர் OBD2 மற்றும் E20 பெற்றதாக வந்துள்ளது.
பஜாஜ் ஆட்டோ
பஜாஜின் பல்சர் என்எஸ்160 மற்றும் என்எஸ் 200 என இரு மாடல்களிலும் கிரே நிறத்தை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.