ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் நியோ ரெட்ரோ டிசைனை பெற்ற புதிய டெஸ்டினி 110 ஸ்கூட்டரின் என்ஜின், மைலேஜ், நிறங்கள், வசதிகள், போட்டியாளர்கள் மற்றும் ஆன்-ரோடு விலை என அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
Hero Destini 110
ஏற்கனவே சந்தையில் உள்ள டெஸ்டினி 125 மாடலின் தோற்றத்தை தழுவியதாக வடிவமைக்கப்பட்டு நேர்த்தியான ரெட்ரோ டிசைனுடன் அதிக வெளிச்சத்தை வழங்கும் எல்இஇ புராஜெக்டர் விளக்குடன் இருபக்கத்திலும் 12 அங்குல வீல் இந்த 110சிசி ஸ்கூட்டர் பிரிவில் மிகப்பெரிய பலமாக உள்ள நிலையில் மைலேஜ் லிட்டருக்கு சராசரியாக 48-52 கிமீ கிடைக்கும் நிலையில், டிஸ்க் பிரேக், வெளிப்புறத்தில் பெட்ரோல் நிரப்பும் வசதியுடன் இருந்தாலும், பூட் ஸ்பேஸ் சற்று கூடுதலாக இருந்திருந்தால் மேலும் சிறப்பானதாக இருந்திருக்கும்.
E20 மற்றும் OBD-2B ஆதரவினை பெற்ற 110.9cc பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 8.04hp பவர் மற்றும் 8.7Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் சிவிடி கியர்பாக்ஸ் பெற்று ஹீரோவின் i3s (Idle Stop-Start System) கொண்டுள்ளது.
- VX Cast Drum: ₹72,000
- ZX Cast Disc: ₹79,000
(ex-showroom)
Hero Destini 110 on-Road Price Tamil Nadu
ஹீரோ மோட்டோகார்ப் டெஸ்டினி 110 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர், புதுக்கோட்டை, விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி, தரும்புரி, நாகர்கோவில் என மற்ற மாவட்டங்களுக்கும் புதுச்சேரி மாநிலத்துக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து கூடுதல் ஆக்செரீஸ் சேர்க்கப்படும் பொழுது மாறுபடும்.
- VX Cast Drum: ₹87,678
- ZX Cast Disc: ₹95,345
(on-road Price in Tamil Nadu)
- VX Cast Drum: ₹80,898
- ZX Cast Disc: ₹89,654
(on-road Price in Pondicherry)
முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் சிங்கிள் ஷாக் சஸ்பென்ஷனை பெற்ற இந்த ஸ்கூட்டரின் பரிமாணங்கள் நீளம் 1859மிமீ, அகலம் 703மிமீ மற்றும் உயரம் 1125 மிமீ கொண்டுள்ளது. இதன் வீல்பேஸ் 1302மிமீ பெற்று 162மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் பெற்றுள்ளது.
5.3 லிட்டர் எரிபொருள் கொள்ளளவு கொண்டுள்ள டெஸ்டினி110 ஸ்கூட்டர் 114 கிலோ எடை கொண்டு முன்பக்கத்தில் 130 மிமீ டிரம் அல்லது 190 மிமீ டிஸ்க் பிரேக்குடன் மற்றும் பின்புறத்தில் 130 மிமீ டிரம் பெற்றுள்ளது. இந்த ஸ்கூட்டரிலும் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டத்தை கொண்டு 12 அங்குல வீல் பெற்றுள்ளது. டீயூப்லெஸ் டயர் பொருத்தப்பட்டு முன்புறத்தில் 90/90 – 12 மற்றும் பின்புறத்தில் 100/80 – 12 டயர் உள்ளது.
டிஜி அனலாக் முறையிலான கிளஸ்ட்டரை பெற்று எரிபொருள் சிக்கனம், வேகம் உள்ளிட்ட அடிப்படையான விவரங்களை பெறும் வகையில் அமைந்துள்ளது. கூடுதலாக யூஎஸ்பி Type-C சார்ஜிங் போர்டு வழங்கப்பட்டுள்ளது.
ஹீரோ டெஸ்டினி 110 நுட்பவிரங்கள்
என்ஜின் | |
வகை | ஏர் கூல்டு, 4 stroke |
Bore & Stroke | 52.4 x 57.8 mm |
Displacement (cc) | 110.9 cc |
Compression ratio | 10.0:1 |
அதிகபட்ச பவர் | 8.04 hp at 7,250 rpm |
அதிகபட்ச டார்க் | 8.87 Nm @ 5,750rpm |
எரிபொருள் அமைப்பு | Fuel injection (FI) |
டிரான்ஸ்மிஷன் & சேஸ் | |
ஃபிரேம் | அண்டர் போன் |
டிரான்ஸ்மிஷன் | ஆட்டோமேட்டிக் |
கிளட்ச் | டிரை டைப் |
சஸ்பென்ஷன் | |
முன்பக்கம் | டெலிஸ்கோபிக் |
பின்பக்கம் | அட்ஜெஸ்டபிள் சிங்கிள் சஸ்பென்ஷன் |
பிரேக் | |
முன்புறம் | டிரம் 130 mm/ டிஸ்க் 190மிமீ |
பின்புறம் | டிரம் 130 mm (with CBS) |
வீல் & டயர் | |
சக்கர வகை | அலாய் |
முன்புற டயர் | 90/90 – 12 ட்யூப்லெஸ் |
பின்புற டயர் | 100/80 – 12 ட்யூப்லெஸ் |
எலக்ட்ரிக்கல் | |
பேட்டரி | 12V- 4Ah /ETZ-5 MF பேட்டரி |
ஸ்டார்டர் வகை | எலக்ட்ரிக் செல்ஃப்/கிக் |
பரிமாணங்கள் | |
நீளம் | 1859 mm |
அகலம் | 703 mm |
உயரம் | 1125 mm |
வீல்பேஸ் | 1302 mm |
இருக்கை உயரம் | 770 mm |
கிரவுண்ட் கிளியரண்ஸ் | 162 mm |
எரிபொருள் கொள்ளளவு | 5.3 litres |
எடை (Kerb) | 114 kg |
ஹீரோவின் டெஸ்டினி 110 நிறங்கள்
சிவப்பு, ப்ளூ, கிரே, கருப்பு மற்றும் வெள்ளை என 5 விதமான நிறங்களை மட்டும் கொண்டதாக டெஸ்டினி 110 மாடல் கிடைக்கின்றது. இதில் சிவப்பு டாப் ZX மாடலிலும் ,கிரே VXயில் மட்டும் உள்ளது.
2025 Hero Destini 110 rivals
புதிதாக வந்துள்ள ஹீரோ டெஸ்டினி 110சிசி ஸ்கூட்டருக்கு போட்டியாக ஆக்டிவா 110, ஜூபிடர் 110 தவிர ஜூம் 110 டியோ 110 தவிர உட்பட பல மாடல்களை எதிர்கொள்ளுகின்றது.
Faqs About Hero Destini 110
ஹீரோ டெஸ்டினி 110 என்ஜின் விபரம் ?
110.9cc பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 8.04hp பவர் மற்றும் 8.7Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் சிவிடி கியர்பாக்ஸ் பெற்று ஹீரோவின் i3s உள்ளது.
ஹீரோ டெஸ்டினி 110 மைலேஜ் எவ்வளவு ?
ஹீரோ டெஸ்டினி 125 மைலேஜ் லிட்டருக்கு 46-52 கிமீ வரை வழங்கும்.
ஹீரோ டெஸ்டினி 110 ஆன்-ரோடு விலை எவ்வளவு ?
ஹீரோ டெஸ்டினி 110 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை ரூ.87,678 முதல் ரூ.95,345 லட்சம் வரை அமைந்துள்ளது.
புதிய டெஸ்டினி 110 போட்டியாளர்கள் ?
டெஸ்டினி 110சிசி ஸ்கூட்டருக்கு போட்டியாக ஆக்டிவா 110, ஜூபிடர் 110 தவிர ஜூம் 110 டியோ 110 உள்ளன.
hero destini 110 image gallery