அறிமுகத்திற்கு முன்னர் டாடா கர்வ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை

ஜூலை 19ஆம் தேதி டாடா மோட்டார்ஸ் கூப்பே ஸ்டைல் பெற்ற கர்வ் மற்றும் கர்வ்.இவி என இரண்டு மாடல்களும் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் விற்பனைக்கு ஆகஸ்ட் 7ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. ஐ.சி.இ மற்றும் எலக்ட்ரிக என இரண்டு விதமான ஆப்ஷனை பெற்றிருந்தாலும் கூட முதற்கட்டமாக எலக்ட்ரிக் ஆப்ஷன் ஆனது விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

விற்பனையில் கிடைக்கின்ற ஹாரியர் மற்றும் நெக்ஸானுக்கு இடையில் வெளியிடப்பட உளள கர்வ் காரின் ஆரம்ப விலை கர்வ் ICE-யில் ரூ.11 லட்சத்திலும் மற்றும் இவி பதிப்பில் ரூ.18 லட்சத்திலும் துவங்கலாம்.

tata curvv suv side

டாடாவின் பிரத்தியேக இரண்டாம் தலைமுறை  Acti-EV அடிப்படையிலான பிளாட்ஃபாரத்தின்  தயாரிக்கப்படுகின்றதால் 40 முதல் 60 kWh வரையிலான பிரிவில் இரண்டு வகையான பேட்டரி ஆப்ஷனை பெற்றிருக்கின்றது. இந்த மாடலின் ரேஞ்ச் 450 கிமீ முதல் 600 கிமீ வரையிலான ரேஞ்ச் பெற்று 2WD & 4WD  என இரு ஆப்ஷனும் எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய 125hp பவர், 1.2-லிட்டர், மூன்று சிலிண்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் கிடைக்கிறது. மேலும் நெக்ஸானிலிருந்து 115 hp, 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர் டீசல் எஞ்சினையும் பெறக்கூடும்.

Level 2 ADAS, பனேரோமிக் சன்ரூஃப், 12.3 அங்குல தொடுதிரை சிஸ்டம் 360 டிகிரி கேமரா உள்ளிட்ட வசதிகளுடன் வரவுள்ளது.

இந்திய சந்தையில் கிடைக்கின்ற எம்ஜி ZS EV, உட்பட வரவுள்ள சிட்ரோயன் பசால்ட், ஹூண்டாய் கிரெட்டா.இவி,  மாருதி eVX மற்றும்  மஹிந்திரா XUV e.8 ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *