Site icon Automobile Tamil

ஹோண்டா பைக் 8 மாநிலங்களில் நெ.1

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் 8 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்திலும் விற்பனையில் முதன்மையாக உள்ளது.
ஹோண்டா சிபிஆர் 650எஃப்

ஹீரோ மற்றும் ஹோண்டா பிரிந்த பின்னர் ஹோண்டா நிறுவன ஆதிக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே ஆக்டிவா ஸ்கூட்டர் விற்பனை மாதம் 2 லட்சத்திற்க்கு மேல் விற்பனை ஆகியுள்ளது.

மஹாராஷ்ட்ரா , கர்நாடகா , குஜராத் , கேரளா , பஞ்சாப் , டெல்லி ஹிமாச்சலபிரதேஷம் மற்றும் கோவா என 8 மாநிலங்களுடன் சண்டிகர் யூனியன் பிரதேசத்திலும் சிறப்பான விற்பனை எண்ணிக்கை பதிவு செய்துள்ளது

கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை முடிந்த முதல் காலாண்டில் 26 சதவீத வளர்ச்சியை இந்தியளவில் ஹோண்டா பதிவு செய்துள்ளது. மேலும்   சண்டிகர் ஹிமாச்சலபிரதேஷம் மற்றும் கோவா போன்றவற்றில் 50 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது.

40 சதவீத வளர்ச்சியை மஹாராஷ்ட்ரா மற்றும் குஜராத்தில் பதிவு செய்துள்ளது. தமிழ்நாடு உள்பட டெல்லி , பஞ்சாப் , கேரளா , உத்திராகண்ட் , கர்நாடகா மற்றும் தெலுங்கானவில் கடந்த காலண்டை விட இந்த காலண்டில் 30 % வளர்ச்சியை ஹோண்டா பதிவு செய்துள்ளது.  ஒட்டுமொத்த இந்திய ஸ்கூட்டர் விற்பனை 59 சதவீத சந்தை மதிப்பினை ஹோண்டா பெற்றுள்ளது.

Exit mobile version