• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ஹவால் பிராண்டில் களமிறங்கும் சீனாவின் கிரேட் வால் மோட்டார்ஸ்

by MR.Durai
20 November 2019, 7:38 pm
in Auto Industry
0
ShareTweetSend

great wall motors

நீண்ட காலமாக இந்திய சந்தையில் களமிறங்க திட்டமிட்டு வந்த சீனாவின் கிரேட் வால் மோட்டார்ஸ் இறுதியாக, ஹவால் (Haval) என்ற தனது பிராண்டின் மூலம் முதல் காரை 2022 ஆம் ஆண்டில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.  சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் ஆலையை கொண்டுள்ள இந்நிறுவனம் எஸ்யூவி மற்றும் பிக்கப் டிரக் தயாரிப்பில் பிரபலமாக சீனாவில் விளங்கி வருகின்றது.

குஜராத்தின் சனந்தில் உள்ள வாகன உற்பத்தி மண்டலத்தில் தனது முதல் உற்பத்தி ஆலையை அமைக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மாநில அரசு நிலத்தை ஒதுக்குவதன் மூலம் முன் நிபந்தனைகளை நிறைவேற்றியது. எனவே, ரூ.7,000 கோடி முதலீட்டை உறுதி செய்துள்ளது.

கிரேட் வால் மோட்டார்ஸ் ஹவால் என்ற பெயரில் இந்தியாவில் வர வாய்ப்புள்ளது. மேலும், தலைமையகம் ஹரியானாவின் குருகிராமில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிறுவனம் பெரும்பாலும் தங்கள் எஸ்யூவிகளை இந்த பெயரில் விற்கிறார்கள். அவர்களிடம் அடுத்தடுத்த மற்றொரு பிராண்டான வெய் (wey) என்ற பெயரில் உள்ளது. இது ஆடம்பர கார்கள், மின்சார வாகனங்கள் மற்றும் ஐசி என்ஜின் வாகனங்கள் இரண்டின் உற்பத்தியும் இந்த  ஆலையில் நடைபெறும். மேலும், இந்நிறுவனம் பல்வேறு நவீனத்துவமான டெக்னாலாஜி சார்ந்த அம்சங்களை கொண்டு தங்கள் மாடலை வெளியிட வாய்ப்புள்ளது.

வரவிருக்கும் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் வாகன உற்பத்தியாளர் Haval பிராண்ட் திறனையும் அவற்றின் சில தயாரிப்புகளையும் காட்சிப்படுத்த வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கிறோம்.

எஸ்ஏஐசி குழுமத்தின் எம்ஜி மோட்டார் நிறுனத்தை தொடர்ந்து இந்தியாவில் கிரேட் வால் மற்றும் சாங்கன் ஆட்டோமொபைல் நிறுவனமும், வால்வோ நிறுவனத்தின் தலைமையான சீனாவின் Geely நிறுவனமும் புரோட்டான் என்ற குறைந்த விலை கார் பிராண்டினை இந்தியாவில் களமிறக்க திட்டமிட்டு வருகின்றது.

Tags: Great Wall MotorsHaval
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ஜனவரி 2026 முதல் எம்ஜி கார்களின் விலை 2 சதவீதம் வரை உயருகின்றது.!

35 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த மாருதி சுசூகி வேகன் ஆர்.!

மஹிந்திராவின் புதிய காம்பேக்ஸ் மினி காம்பாக்டர் அறிமுகம்.!

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் பஸ் மற்றும் ஸ்கூட்டர் தயாரிக்க ஒப்பந்தம்.!

நவம்பர் 2025 விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார் நிறுவனங்கள்.!

2026ல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பஸ் என வின்ஃபாஸ்டின் அறிமுக திட்டங்கள்.!

ஓசூரில் துவங்கிய பிஎம்டபிள்யூ F 450 GS உற்பத்தி விற்பனைக்கு எப்பொழுது.?

20 நிமிடங்களில் மின்சார வாகனங்ளுக்கு மஹிந்திராவின் Charge_IN துவக்கம்.!

11,529 ஹைரைடர் கார்களை திரும்ப அழைக்கும் டொயோட்டா

கேடிஎம் 125, 250 மற்றும் 390 டியூக் பைக்குகளை திரும்ப அழைப்பு.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version