Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 427

Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 428
இறுதி வாய்ப்பு.., பிஎஸ்-4 இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரை தள்ளுபடி வழங்கும் ஹீரோ

இறுதி வாய்ப்பு.., பிஎஸ்-4 இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரை தள்ளுபடி வழங்கும் ஹீரோ

Hero Pleasure Plus 110 FI

நாட்டின் மிகப்பெரிய  இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப், தனது டீலர்களின் வசம் உள்ள இரு சக்கர வாகனங்களுக்கு அதிகபட்சமாக ரூ.10,000 வரை தள்ளுபடி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

பிஎஸ்-4 வாகனங்ளை விற்பனை செய்ய லாக் டவுன் நீக்கப்பட்ட பிறகு 10 நாட்கள் வரை 10 சதவீத வாகனங்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சலுகைகளைப் பெற ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் தங்களது அருகிலுள்ள டீலரை தொடர்பு கொண்டு விருப்பமான இரு சக்கர வாகனத்தின் பிஎஸ் 4 மாடல் இருப்பு குறித்து அறிந்து கொள்ளலாம். அதே நேரத்தில் ஆவணங்கள் மற்றும் விநியோகத்தின் மேலதிக நடைமுறைகள் தற்போதைய ஊரடங்கு உத்தரவு மேற்கொள்ளப்படலாம்.

நாட்டில் மொத்தமாக ரூ.6,200 கோடி மதிப்பிலான 7 லட்சம் இரு சக்கர வாகனங்கள், 12,000 பயணிகள் வாகனம் மற்றும் 8,000 வர்த்தக வாகனங்கள் என மொத்தமாக விற்பனை செய்யப்படாமல் 7.20 லட்சம் வாகனங்கள் உள்ளது.

Exit mobile version