• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

மஹிந்திராவின் நாசிக் ஆலையில் 25 லட்சம் வாகனங்கள் உற்பத்தி..!

by MR.Durai
4 February 2020, 2:42 pm
in Auto Industry
0
ShareTweetSend

mahindra

மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தின் நாசிக் ஆலை 1981 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, தற்போது வரை 25,00,000 வாகனங்களை உற்பத்தி செய்து புதிய சாதனையை படைத்துள்ளது. 25 லட்சமாவது காராக ஸ்கார்ப்பியோ எஸ்யூவி தயாரிக்கப்பட்டுள்ளது.

மஹிந்திராவின் நாசிக் தொழிற்சாலை 1981 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. தற்போது மொத்தம் 147 ஏக்கர் பரப்பளவு மற்றும் 2,10,000 வாகனங்களின் உற்பத்தி திறன் கொண்டதாக விரிவடைந்துள்ளது. ஆலையில் இருந்து தயாரிக்கப்பட்ட முதல் வாகனம் FJ மினி பஸ் ஆகும். ஆலை துவங்கப்பட்ட காலகட்டத்தில் ஒரு நாளைக்கு எட்டு வாகனங்களை உற்பத்தி செய்தது.

இன்று, 700 க்கும் மேற்பட்ட வாகனங்கள் தினமும் தயாரிக்கப்பட்டு 34 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த ஆலை தற்போது ஸ்கார்ப்பியோ, மராஸ்ஸோ, எக்ஸ்யூவி 300, பொலெரோ, இ-வெரிட்டோ, மற்றும் தார் போன்ற மஹிந்திரா உற்பத்தி செய்கின்றது.

இந்த நிகழ்வில் பேசிய மஹிந்திரா & மஹிந்திராவின் ஆட்டோமொடிவ் பிரிவின் உற்பத்தித் தலைவர் விஜய் கல்ரா கூறுகையில், “இந்த சாதனை எங்கள் வாகன பயணத்தில் எங்களுக்கு ஒரு முக்கியமான தருணம் மற்றும் நாசிக் ஆலையின் ஒவ்வொரு ஊழியரும் மேற்கொண்ட அயராத முயற்சிக்கு சான்றாகும். இந்த சாதனை வரவிருக்கும் காலங்களில் எங்கள் நாசிக் ஆலைக்கு இன்னும் பல பாராட்டுக்களுக்கு ஒரு படியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

Tags: Mahindra
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ஜனவரி 2026 முதல் எம்ஜி கார்களின் விலை 2 சதவீதம் வரை உயருகின்றது.!

35 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த மாருதி சுசூகி வேகன் ஆர்.!

மஹிந்திராவின் புதிய காம்பேக்ஸ் மினி காம்பாக்டர் அறிமுகம்.!

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் பஸ் மற்றும் ஸ்கூட்டர் தயாரிக்க ஒப்பந்தம்.!

நவம்பர் 2025 விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார் நிறுவனங்கள்.!

2026ல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பஸ் என வின்ஃபாஸ்டின் அறிமுக திட்டங்கள்.!

ஓசூரில் துவங்கிய பிஎம்டபிள்யூ F 450 GS உற்பத்தி விற்பனைக்கு எப்பொழுது.?

20 நிமிடங்களில் மின்சார வாகனங்ளுக்கு மஹிந்திராவின் Charge_IN துவக்கம்.!

11,529 ஹைரைடர் கார்களை திரும்ப அழைக்கும் டொயோட்டா

கேடிஎம் 125, 250 மற்றும் 390 டியூக் பைக்குகளை திரும்ப அழைப்பு.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version