இந்திய சந்தையில் இயங்கி வரும் சுசூகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம், கடந்த 2018 டிசம்பர் மாத விற்பனையில் சுமார் 43,874 யூனிட்டுகளை விற்பனை செய்து முந்தைய வருடத்தின் இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 34 சதவீத வளர்ச்சியாகும்.

சுசூகி பைக் நிறுவனம், தொடர்ந்து மிக சிறப்பான வளர்ச்சியை பெற்று வரும் நிலையில் ஜிக்ஸர், ஆக்செஸ் 125, பர்க்மேன் 125 ஸ்கூட்டர் ஆகிய மாடல்கள் மிக சிறப்பான விற்பனையை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றது. 2019 ஆம் நிதி ஆண்டில் 7.50 லட்சம் வாகனங்களை விற்பனை செய்ய இந்நிறுவனம் இலக்கை நிர்ணையித்துள்ளது.

கடந்த 2017 டிசம்பரில் ,  32,786 யூனிட்டுகளை விற்பனை செய்திருந்த நிலையில், இந்த டிசம்பர் 2018 யில் சுமார் 43,874 யூனிட்டுகளை விற்பனை செய்து முந்தைய வருடத்தின் இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 34 சதவீத வளர்ச்சியடைந்துள்ளது.

ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 2019 ஆம் நிதி ஆண்டில் மொத்தமாக 5,45,683 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. இதே காலகட்டத்தில் முந்தைய நிதி ஆண்டில் 4,20,736 யூனிட்டுகளை விற்பனை செய்திருந்தது குறிப்பிடதக்கதாகும்.

2019 ஆம் ஆண்டில் சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் சுசூகி ஜிக்ஸெர் 250 பைக் மாடலை இந்திய சந்தையில் வெளியிட வாய்ப்புள்ளது.