விற்பனையில் டாப் 10 டூ-வீலர் விபரம் – டிசம்பர் 2018

799d7 hero hf deluxe ibs

கடந்த 2018 ஆம் ஆண்டின் இறுதி மாதத்தில், விற்பனையில் முன்னணியாக விளங்கிய டாப் 10 டூ-வீலர் மாடல்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் அறிந்து கொள்ளலாம். ஹீரோ ஸ்பிளென்டர் முதலிடத்தை பெற்றுள்ளது.

டாப் 10 டூ-வீலர்கள்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிளென்டர் , ஹெச்எஃப் டீலக்ஸ் என இரு மாடல்கள் மட்டும் இறுதி மாதத்தில் இடம்பிடித்துள்ளது. குறிப்பாக ஹீரோ கிளாமர் மற்றும் பேஸன் பைக்குகள் பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளது. ஸ்பிளென்டர் பைக் விற்பனை எண்ணிக்கை 178,411 ஆகும்.

ஹோண்டா நிறுவனத்தின் சிபி ஷைன் பைக் பின் தங்கியிருப்பதுடன், ஆக்டிவா விற்பனை இறுதி மாதம் என்பதனால் குறைந்துள்ளது. ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் எண்ணிக்கை 174,393 ஆகும். பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் மற்றும் பிளாட்டினா பைக்குகள் பட்டியலில் உள்ளது.

38b71 2018 honda aviator pearl spartan red profile

முதன்முறையாக முதல் 10 இடங்களுக்குள் சுஸூகி ஆக்செஸ் ஸ்கூட்டர் முன்னேறியுள்ளது. மேலும் சிறிய இடைவெளிக்குப் பிறகு ராயல் என்ஃபீல்டு கிளாசிக் மாடல் 10வது இடத்தை பெற்றுள்ளது. கிளாசிக் 350 மோட்டார் சைக்கிள் விற்பனை எண்ணிக்கை 34325 ஆக உள்ளது.

இந்த முதல் 10 பட்டியலில் ஆக்டிவா, ஜூபிடர் மற்றும் ஆக்செஸ் என மூன்று ஸ்கூட்டர்கள் மற்றும் டிவிஎஸ் எக்ஸ்எல் மொபெட் இடம்பெற்றுள்ளது. முழுமையான பட்டியல் விற்பனை எண்ணிக்கை விபரத்தை கீழுள்ள பட்டியலில் காணலாம்.

விற்பனையில் டாப் 10 டூ-வீலர்கள் – டிசம்பர் 2018

வ.எண்மாடல்டிசம்பர் 2018
1ஹீரோ ஸ்பிளென்டர்178,411
2ஹோண்டா ஆக்டிவா174,393
3ஹீரோ HF டீலக்ஸ்165,321
4டிவிஎஸ் XL சூப்பர்59,828
5பஜாஜ் பிளாட்டினா58,474
6பஜாஜ் பல்சர் வரிசை56,737
7டிவிஎஸ் ஜூபிடர்59,502
8ஹோண்டா CB ஷைன்49,468
9சுஸூகி ஆக்செஸ்39,163
10ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 35034,325

ab71c re classic 350

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *