ரூ.57,134 விலையில் புதிய ஹோண்டா டியோ ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டியோ ஸ்கூட்டர் என்ஜின் மற்றும் மெக்கானிக்கல் அமைப்பில் எந்த மாற்றங்களும் இல்லை.
கடந்த 2002ஆம் ஆண்டு முதல் சந்தையில் விற்பனையில் உள்ள டியோ ஸ்கூட்டர் இந்திய மட்டுமல்லாமல் இலங்கை , நேபால் , மெக்சிக்கோ மற்றும் கொலம்பியோ போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. ஹோண்டா நிறுவனத்தின் அதிக எண்ணிக்கையில் ஏற்றுமதி செய்யப்படும் மாடலாக விளங்குகின்றது.
லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ் தரவல்ல ஹெச்இடி நுட்பத்தினை பெற்றுள்ள 109சிசி என்ஜினை பெற்றுள்ளது. இதன் ஆற்றல் 8bhp மற்றும் இழுவைதிறன் 8.77Nm ஆகும். இதில் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
சில தோற்ற மாற்றங்களை மட்டுமே கொண்டுள்ள 2016 ஹோண்டா டியோ ஸ்கூட்டரில் புதிதாக கிரே வண்ணம் இணைக்கப்பட்டுள்ளது. மற்ற வண்ணங்களான சிவப்பு, நீளம் , பச்சை மற்றும் கருப்பு வண்ணங்கள் தொடர்கின்றது. மேலும் புதிதாக முப்பரிமான எம்பளம் சேர்க்கப்பட்டுள்ளது.
2002 முதல் விற்பனையில் உள்ள டியோ ஸ்கூட்டர் 10 லட்சம் என்ற விற்பனை இலக்கினை தற்பொழுது இந்திய சந்தையில் கடந்துள்ளது. 2016 ஹோண்டா டியோ ஸ்கூட்டர் விலை ரூ.57,134 ( ஆன்ரோடு சென்னை விலை ).