கியா SP எஸ்யூவி கான்செப்ட் டீசர் வெளியீடு – ஆட்டோ எக்ஸ்போ 2018

0

Kia SP Concept SUV Teasedஇந்தியாவில் கியா மோட்டார்ஸ் நிறுவனம், வருகின்ற 2019 ஆம் ஆண்டின் மத்தியில் கியா கார்கள் மற்றும் எஸ்யூவி மாடலை அறிமுகம் செய்ய உள்ள நிலையில், மேட் ஃபார் இந்தியா எனும் நோக்கத்தில் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்ய உள்ள கியா SP எஸ்யூவி கான்செப்ட்டை டீசர் செய்துள்ளது.

கியா SP எஸ்யூவி டீசர்

kia stonic suv

Google News

வருகின்ற பிப்ரவரி 9ந் தேதி முதல் 14ந் தேதி வரை நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ்போ 2018 வாகன கண்காட்சியில் 16 வாகனங்களை காட்சிப்படுத்த உள்ள நிலையில்,இவற்றில் பிரிமியம் ரக எஸ்யூவி, எலெக்ட்ரிக் கார், பிளக்-இன் ஹைபிரிட் உட்பட பல்வேறு மாடல்களை காட்சிப்படுத்த உள்ளது.

2018 ஆட்டோ எக்ஸ்போவில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட உள்ள கியா எஸ்பி கான்செப்ட் எஸ்யூவி, இந்தியாவின் பாரம்பரிய எஸ்யூவி வடிவமைப்பை கொண்டதாக நவீன நுட்பங்களுடன், இளைய தலைமுறையினர் விரும்பும் அம்சங்களை கொண்டதாக வரவுள்ள இந்த கான்செப்ட் மாடல் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி மாடலை பின்புலமாக கொண்டதாக அமைந்திருக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆட்டோ எக்ஸ்போவில் கியா நிறுவனம், பிரிமியம் ரக எஸ்யூவி, எலெக்ட்ரிக் கார், பிளக்-இன் ஹைபிரிட் உட்பட ஸ்டிங்கர் ஸ்போர்ட்ஸ் செடான் ஆகிய மாடல்கள் காட்சிப்படுத்த உள்ளது.

kia Stinger car

ஆந்திரபிரதேச மாநிலத்தில் புதிய தொழிற்சாலையை கட்டமைத்து வரும் கியா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்த ஆண்டு முதல் புதிய கார்கள் மற்றும் எஸ்யூவி மாடலை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

Kia sp SUV Teaser Rear

2017 kia sorento
2017 Sorento

kia soul suv