டுவென்டி டூ பிளோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது

0

22 motor flowஇந்தியாவைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனம் டுவென்டி டூ மோட்டார்ஸ் நிறுவனம், 2018 ஆட்டோ எக்ஸ்போவில் டுவென்டி டூ பிளோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூ.74,740 விலையில் விற்பனைக்கு வெளியிடப்படுள்ளது.

டுவென்டி டூ பிளோ ஸ்கூட்டர்

இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் மின்சார வாகன துறை வளர்ச்சி அடைந்து வருகின்ற நிலையில் டுவென்டி டூ மோட்டார்ஸ் நிறுவனம் மிக சிறப்பான வகையில் அம்சத்தை பெற்றிருப்பதுடன் 80 கிமீ தொலைவினை பயணிக்கும் திறன் கொண்டிருக்கும்.

Google News

90 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 2,100 வாட்ஸ் மின்சார மோட்டார் பயன்படுத்தப்பட்டு 85 கிலோ எடை பெற்ற இந்த ஸ்கூட்டர் 150 கிலோ எடை தாங்கும் திறன் கொண்டதாக அமைந்திருக்கும். முழுமையான சார்ஜ் ஏறுவதுற்கு 2 மணி நேரம் எடுத்துக் கொள்ளும் ஃப்ளோ மாடல் அதிகபட்சமாக 80 கிமீ தொலைவு வரை பயணிக்கலாம்.

ஃப்ளோ ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள செயற்க்கை நுண்ணறிவு (Artificial Intellgence – AI) திறன் பெற்றுள்ளது.இதன் வாயிலாக சிறப்பான வகையில் ஆதரவினை பெறுவதுடன் வாகனத்தின் இருப்பிடத்தை அறிந்து திருட்டை தடுக்கும் வசதி ஆகியவற்றை பெற்றிருக்கின்றது.

எலக்ட்ரானிக் பிரேக் சிஸ்டம், டூயல் டிஸ்க் பிரேக் அம்சங்களை பெற்றுள்ள 22 மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிளோ ஸ்கூட்டர் விலை ரூ.74,740 (எக்ஸ-ஷோரூம்)