வோக்ஸ்வேகன் ID.Crozz எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகமாகிறது – ஆட்டோ எக்ஸ்போ 2020

ID.Crozz எலக்ட்ரிக் எஸ்யூவி

வோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம், நாட்டின் மிகப்பெரிய மோட்டார் வாகன கண்காட்சியான ஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில் ID.Crozz எலக்ட்ரிக் எஸ்யூவி கான்செப்ட் முதன்முறையாக இந்தியாவில் காட்சிக்கு வரவுள்ளது. 2017 ஆம் ஆண்டு ஷாங்காய் மோட்டார் ஷோவில் முதலில் காட்சிப்படுத்தப்பட்டது.

பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி புது டெல்லியில் நடைபெற உள்ள வோக்ஸ்வேகன் குழுமத்தின் பிரத்தியேக மீடியா நைட் அரங்கில் ஸ்கோடா, வோக்ஸ்வேகன், போர்ஷே மற்றும் ஆடி போன்ற நிறுவனங்களின் இந்தியாவில் அறிமுகமாக உள்ள கார்களை வெளியிடும். அதனை தொடர்ந்து ஆட்டோ எக்ஸ்போவிலும் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 500 கிமீ தொலைவு பயணிக்கும் வரம்புடன் வரவுள்ள ஐடி. கிராஸ் காரில்  83kWh லித்தியம் ஐயன் பேட்டரி பொருத்தப்பட்டு முன்புற சக்கரங்களுக்கு 102hp பவர் மற்றும் 140Nm டார்க் வெளிப்படுத்தும் மின்சார மோட்டார் மற்றும் பின்புற சக்கரங்களுக்கு பொருத்தப்பட்டுள்ள மின்சார மோட்டார் 204hp பவர் மற்றும் 310Nm டார்க் வெளிப்படுத்தும். ஆக மொத்தமாக ஐடி.கிராஸ் மின்சார காரின் அதிகபட்ச பவர் 306hp மற்றும் 450Nm டார்க் கொண்டிருக்கும்.

இந்த மின்சார எஸ்யூவி காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 120 கிமீ ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் 2020 ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு கிடைக்க உள்ள வோக்ஸ்வேகன் I.D. Crozz இந்தியாவில் அடுத்த ஆண்டு வெளியிடப்படலாம். வோக்ஸ்வேகன் குழுமம் 2025 ஆம் ஆண்டிற்குள் 23 முழுமையான எலக்ட்ரிக் கார்களை வெளியிட உள்ளது.

volkswagen auto expo 2020 teased

ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிக்கு வரவுள்ள வோக்ஸ்வேகனின் டி கிராஸ் காரின் அறிமுகம் 2021 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் வெளியிடப்படலாம். இதுதவிர இந்நிறுவனம், டி-ராக், டிகுவான் ஆல் ஸ்பேஸ், மற்றும் எலக்ட்ரிக் ID.கிராஸ் போன்ற மாடல்களை காட்சிப்படுத்த உள்ளது.