2018 ஆட்டோ எக்ஸ்போ : மாருதி சுஸூகி கார்கள்

இந்தியாவின் மிக பிரமாண்டமான ஆட்டோ எக்ஸபோ 2018 பிப்ரவரி 9, 2018 முதல் பிப்ரவரி 14, 2018 வரை டெல்லி அருகில் கிரேட்டர் நொய்டா-வில் உள்ள இந்திய எக்ஸ்போ மார்ட் அரங்கில் மாருதி சுஸூகி புதிய கான்செப்ட் கார்கள், எஸ்யூவி, புதுப்பிக்கப்பட்ட கார்கள், எஸ்யூவி போன்றவை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

suzuki swift sport unveil

இந்தியாவின் ஆட்டோமொபைல் உபகரண உற்பத்தியாளர்கள் சங்கம் (ACMA – Automotive Component Manufacturers Association of India), இந்திய தொழில் கூட்டமைப்பு (CII – Confederation of Indian Industry) மற்றும் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் (SIAM – Society of Indian Automobile Manufacturers ) மற்றும் சர்வதேச மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் அமைப்பு (OICA- Organisation Internationale des Constructeurs d’Automobiles) ஆகியவற்றின் ஒருங்கினைப்பில் ஆட்டோ எக்ஸபோ 2018 கண்காட்சி நடைபெற உள்ளது.

new Suzuki swift

2018 ஆட்டோ எக்ஸ்போ : மாருதி சுஸூகி

இந்தியாவின் முதன்மையான ஆட்டோமொபைல் தயாரிப்பாளரான மாருதி சுஸூகி நிறுவனம் 2018 வாகன கண்காட்சி அரங்கில் அறிமுகம் செய்ய உள்ள மாடல்களை பற்றி முக்கிய விபரங்களை இங்கே அறிந்து கொள்ளலாம்.

2018 மாருதி சுஸூகி ஸ்விஃப்ட்

2016 ஆம் ஆண்டின் இறுதியில் ஜப்பான் , ஐரோப்பியா நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய தலைமுறை சுஸூகி ஸ்விஃப்ட் காரின் அடிப்படையிலான மாருதி சுஸூகி ஸ்விஃப்ட்  கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Suzuki swift red color

மே மாத தொடக்க வாரங்களில் இந்திய சந்தையில் வெளியான புதிய டிசையர் காரினை போன்ற முகப்பினை பெற்றதோடு, அதற்கு ஈடான வசதிகளை பெற்றதாக தற்போதைய 1.2 லிட்டர் கே வரிசை பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் என இரண்டிலும், அடப்படையான இரட்டை பாதுகாப்பு காற்றுப்பைகள், ஏபிஎஸ், இபிடி உள்ளிட்ட அம்சங்களை பெற்றதாக வரவுள்ளது.

இன்டிரியர் அமைப்பிலும் 7 அங்குல இன்ஃடபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகளை பெற்றதாகவும் வரவுள்ளது.

2018 மாருதி ஸ்விஃப்ட் ஸ்போர்ட்

பிராங்ஃபர்ட் மோட்டார் ஷோவில் வெளியிடப்பட உள்ள ஸ்விஃப்ட் காரின் அடிப்படையிலான ஸ்போர்ட்டிவ் வெர்ஷன் மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்திய சந்தையிலும் ஸ்விஃப்ட் ஸ்போர்ட் அடுத்த ஆண்டின் இறுதியில் வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Suzuki Swift Sport Frankfurt show

புதிய மாருதி ஆல்டோ

பல ஆண்டுகளாக சந்தையின் முதன்மையான வாகனமாக விளங்கும் ஆல்டோ மற்றும் ஆல்டோ கே10 போன்றவற்றுக்கு மாற்றாக ரெனோ க்விட் மற்றும் ரெடி-கோ உள்ளிட்ட மாடல்களுக்கு எதிராக நிலைநிறுத்தப்பட உள்ள க்ராஸ்ஓவர் மாடல்களை போன்ற வடிவமைப்பினை பெற்றதாக புதிய தலைமுறை ஆல்டோ விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய கார் அடுத்த ஆண்டின் இறுதிக்குள் சந்தைக்கு விற்பனைக்கு வரலாம்.

maruti vitara brezza suv sketch

சியாஸ் ஃபேஸ்லிஃப்ட்

2018 வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட உள்ள மேம்படுத்தப்பட்ட செடான் ரக காராக மாருதி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் கூடுதல் வசதிகள் மற்றும் மாருதியின் புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்டிரியர் அமைப்பிலும் 7 அங்குல இன்ஃடபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகளை பெற்றதாகவும் வரவுள்ளது.

maruti ciaz

புதிய வேகன் ஆர்

இந்தியாவின் டால்பாய் ஹேட்ச்பேக் என்ற பெருமைக்குரிய மாடலாக பல ஆண்டுகளாக சந்தையில் உள்ள வேகன் ஆர் காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஜப்பான உள்ளிட்ட நாடுகளில் வெளியிடப்பட்டதின் அடிப்படையில் 2018 வேகன் ஆர் வெளியிடப்பட உள்ளது.

2017 maruti Suzuki Wagon R front