டுகாட்டி ஸ்க்ராம்பளர் பைக் வாங்க சிறப்பு சலுகை

0

உலகின் பிரசத்தி பெற்ற சூப்பர் பைக் தயாரிப்பாளரான டுகாட்டி நிறுவனத்தின் 90வது ஆண்டு விழா கொண்டாடத்தை ஒட்டி டுகாட்டி ஸ்க்ராம்பளர் அணிவரிசை பைக்குளுக்கு ரூ.90,000 வரை விலை சலுகை டிசம்பர் 31, 2016 வரை வழங்கப்பட்டுள்ளது.

ducati-scrambler-icon

Google News

இத்தாலியில் 1926 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டுகாட்டி மோட்டார்ஸ் 90வது ஆண்டினை நிறைவு செய்வதனை கொண்டாடும் வகையில் வழங்கப்பட்டுள்ள சிறப்பு விலை சலுகை வாயிலாக ரூ.90,000 வரை விலை குறைக்கப்பட்டு ஸ்க்ராம்பளர் வரிசை பைக்குகள் கிடைக்கின்றது. மேலும் மாதாந்திர கடன் திட்டத்தில் வாங்க விரும்புபவர்களுக்கு யெஸ் வங்கி வாயிலாக 7 ஆண்டுகளில் திருப்பி செலுத்தும் வகையிலான திட்டத்தை டுகாட்டி அறிவித்துள்ளது.

இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் சூப்பர் பைக் சந்தையில் டுகாட்டி நிறுவனத்தின் பங்கு கனிசமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மிக வேகமாக அனைத்து பைக் பிரிவிலும் உயர்ந்து வருவதாக இந்தியா டுகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரவி அவலுர் தெரிவித்துள்ளார்.

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் வரிசை

இந்தியாவில் டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் அணிவரிசையில் ஸ்க்ராம்ப்ளர் ஐகான், ஸ்க்ராம்ப்ளர் கிளாசிக், ஸ்க்ராம்ப்ளர் அர்பன் என்டியூரோ மற்றும் ஸ்க்ராம்ப்ளர் ஃபுல் த்ராட்டில் என மொத்தம் 4 விதமான மாடல்கள் விற்பனைக்கு கிடைக்கின்றது.

இந்த பைக்குகளில் 75 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் 803 சிசி இரட்டை சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு உள்ளது.இதன் டார்க் 68 நியூட்டன்மீட்டர் ஆகும்.இதில் 6 வேக கியர்பாக்ஸ்இடம்பெற்றுள்ளது.

ducati-scrambler-classic

ஸ்க்ராம்பளர் பைக் விலை விபரம்

  • Ducati Scrambler Icon (Red) : ரூ. 6.07 லட்சம்
  • Ducati Scrambler Classic: Iரூ. 7.28 லட்சம்
  • Ducati Scrambler Urban Enduro: ரூ. 7.28 லட்சம்
  • Ducati Scrambler Full Throttle: ரூ. 7.28 லட்சம்

(அனைத்தும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை )…. விலை சலுகை டிசம்பர் 31, 2016 வரை மட்டுமே.