டுகாட்டி ஸ்க்ராம்பளர் டெஸர்ட் ஸ்லெட் விற்பனைக்கு வந்தது

60, 70 களில் பிரசத்தி பெற்ற விளங்கிய ஆஃப் ரோடு பைக்குகளை மையப்படுத்தி வடிவமைக்கப்பட்ட புதிய டுகாட்டி ஸ்க்ராம்பளர் டெஸர்ட் ஸ்லெட் மோட்டார் சைக்கிள் இருவிதமான நிறங்களில் கிடைக்கின்றது.

டுகாட்டி ஸ்க்ராம்பளர் டெஸர்ட் ஸ்லெட்

இந்திய சந்தையில் சிவப்பு மற்றும் வெள்ளை நிற வண்ணத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்க்ராம்பளர் டெஸர்ட் ஸ்லெட் பைக்களுடன் ஸ்க்ராம்பளர் ஐகான் மற்றும் ஸ்க்ராம்பளர் கிளாசிக் மாடல்களின் பிஎஸ் 4 எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல்களின் விலையும் வெளியாகியுள்ளது.

72 bhp ஆற்றலை 8250 rpm சுழற்சியில் வெளிப்படுத்தும் ஆயில் கூல்டு 803சிசி எஞ்சின் மாடலின் அதிகபட்ச டார்க் 67 Nm  ஆக 5750 rpm சுழற்சியில் கிடைக்கின்றது. மிக சிறப்பான செயல்திறன் மிக இந்த பைக் மாடலில் பல்வேறு விதமான சிறப்பம்சங்களை கொண்டதாக விளங்குகின்றது.

200மிமீ வரை நீட்டிக்கும் பயணத்தை  கொண்ட முன் மற்றும் பின்புற சஸ்பென்ஷன்களுடன், ஒற்றை டிஸ்க் பெற்ற 330மிமீ சிங்கிள் டிஸ்க் பிரேக் அமைப்பினை முன்புற டயரிலும், பின்புறத்தில் ஒற்றை 245மிமீ டிஸ்க் பிரேக்குடன் ஏபிஎஸ் ஆப்ஷனை இந்த பைக் பெற்றுள்ளது.

இரட்டை பயன்களை பெற்றுள்ள டெஸர்ட் ஸ்லெட் மாடலின் முன்புறத்தில் 19 அங்குல வீல் மற்றும் பின்புறத்தில் 17 அங்குல வீல் பொருத்தப்பட்டு இரண்டிலும் பைரேலி ஸ்கார்ப்பியன் எஸ்டிஆர் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

விலை பட்டியல்

டுகாட்டி ஸ்க்ராம்பளர் டெஸர்ட் ஸ்லெட் சிவப்பு – ரூ. 9.32 லட்சம்

டுகாட்டி ஸ்க்ராம்பளர் டெஸர்ட் ஸ்லெட் வெள்ளை – ரூ. 9.45 லட்சம்

டுகாட்டி ஸ்க்ராம்பளர் ஐகான் – ரூ. 7.32 லட்சம்

டுகாட்டி ஸ்க்ராம்பளர் கிளாசிக் – ரூ. 8.45 லட்சம்

(விலை எக்ஸ்-ஷோரூம் இந்தியா )

Recommended For You