விற்பனையில் டாப் 10 ஸ்கூட்டர்கள் – செப்டம்பர் 2020

0

Hero Pleasure plus Platinum

இந்தியாவின் ஸ்கூட்டர் சந்தையில் ஹோண்டா ஆக்டிவா விற்பனை எண்ணிக்கை 2,57,900 பதிவு செய்து டாப் 10 ஸ்கூட்டர்களில் முதன்மையான ஸ்கூட்டராக விளங்குகின்றது. இதற்கு அடுத்தப்படியாக, டிவிஎஸ் ஜூபிடர் மாடல் விற்பனை எண்ணிக்கை 56,085 ஆக பதிவு செய்துள்ளது.

125சிசி சந்தையில் சுசூகி ஆக்செஸ், டிவிஎஸ் என்டார்க் யமஹா ரே, யமஹா ஃபேசினோ, ஹீரோ டெஸ்ட்னி 125 போன்றவை இடம்பெற்றுள்ளது. இந்த பிரிவில் சுசூகி ஆக்செஸ் ஸ்கூட்டரின் எண்ணிக்கை 53,031 ஆக பதிவு செய்துள்ளது.

டாப் 10 ஸ்கூட்டர்கள் – செப்டம்பர் 2020

வ.எண் தயாரிப்பாளர் செப்டம்பர் 2020
1. ஹோண்டா ஆக்டிவா 2,57,900
2. டிவிஎஸ் ஜூபிடர் 56,085
3. சுசூகி ஆக்செஸ் 53,031
4. ஹோண்டா டியோ 33,639
5. டிவிஎஸ் என்டார்க் 26,150
6. ஹீரோ பிளெஷர் 20,068
7. ஹீரோ டெஸ்ட்னி 125 19,644
8. யமஹா ரே 19,540
9. ஹீரோ மேஸ்ட்ரோ 14,029
10. யமஹா ஃபேசினோ 13,640