பிரபல போர்ஷே 911 காரின் பெயர் பின்னணி விபரம் வெளியானது

911 targaஉலகின் பிரசத்தி பெற்ற ஸ்போர்ட்டிவ் கார் மாடல்களில் ஒன்றாக விளங்குகின்ற போர்ஷே நிறுவனத்தின் போர்ஷே 911 கார் பெயர் உருவான விபரத்தை போர்ஷே வெளியிட்டுள்ளது.

போர்ஷே 911 மாடல்

ஒவ்வொரு காருக்கும் தனியான பிராண்டு பெயர் அதன் மதிப்பை மிகப்பெரிய அளவில் எடுத்துச் செல்ல மிக பெரிய உதவியாக அமைந்து வருகின்றது.

முதன்முறையாக 911 என்ற பெயரை உருவாக்கியதன் பின்னணியை போர்ஷே விளக்கியுள்ளது. 1963 ஆம் ஆண்டு பிரபலமான ஸ்போர்ட்டிவ் மாடலை வடிவமைத்த இந்நிறுவனம் அந்த மாடலுக்கு 901 என பெயிரிட்டிருந்தது.

ஆனால் மூன்று இலக்க எண்களில் இடையில் 0 உள்ள அனைத்து எண்களையும் தனது பிராண்டில் பயன்படுத்த பீஜோ நிறுவனம் வர்த்தகரீதியான காப்புரிமையை பெற்றிருப்பதாக நட்புரீதியான கடிதம் வாயிலாக போர்ஷேவுக்கு பீஜோ குறிப்பிட்டிருந்தது.

எறவே, மாற்று பெயரை நோக்கி பயணித்த போர்ஷே இடையில் இருந்த பூஜ்யத்தை நீக்கி விட்டு 1 என்ற எண்ணை இணைத்து 911 என உருவாக்கியது. இதுவே போர்ஷே 911 காரின் சுவாரஸ்யமான பெயர் பின்னணியாகும்.

பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த ரகசியத்தை முதன்முறையாக அதிகார்வப்பூர்வமாக போர்ஷே வெளியிட்டுள்ளது.

Exit mobile version