Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஆட்டோ எக்ஸ்போ 2020 கண்காட்சியை தவிர்க்கும் ஹீரோ உட்பட முன்னணி நிறுவனங்கள்

by MR.Durai
12 October 2019, 12:59 pm
in Auto Expo 2023
0
ShareTweetSend

Hero Motocorp Electric

இந்தியாவின் மிகப்பெரிய மோட்டார் வாகன கண்காட்சியை முதன்மையான டூ வீலர் தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் உட்பட ராயல் என்ஃபீல்ட், டிவிஎஸ், பஜாஜ, டொயோட்டா , ஃபோர்ட் மற்றும் ஜீப் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில் பங்கேற்க வாய்ப்பில்லை என தெரிய வந்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் கண்காட்சி வரும் பிப்ரவரி மாதம் ஆட்டோ எக்ஸ்போ 2020 கண்காட்சி கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியன் எக்ஸ்போ மார்டில் பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் ஆட்டோ எக்ஸ்போ உதிரி பாகங்கள் 2020 கண்காட்சி  பிப்ரவரி 6 முதல் 9 ஆம் தேதி வரை புது டெல்லியில் உள்ள பிரகதி மெய்டனில் நடைபெற உள்ளது.

உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பாளராக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உள்நாட்டு இரு சக்கர வாகன விற்பனை ஏற்ற இறக்கம் நிறைந்த காலத்தில் பயணித்து வருகின்றது. விற்பனை இன்னும் மந்தமாகவே உள்ளது. இந்த சூழ்நிலை சவாலாக இருந்தபோதிலும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் எதிர்கால மாசு உமிழ்வு நடைமுறைக்கு ஏற்ப மேம்படுத்தி வருகின்றது. ஏப்ரல் 1, 2020 முதல் நடைமுறைக்கு வரவுள்ள விதிகளுக்கு முன்னதாக புதிய உமிழ்வு விதிமுறைகளுக்கு ஏற்ப வாகனங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். இதே நேரத்தில், எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்களின் நலனுக்காக வணிக நோக்கங்களை பூர்த்தி செய்வதில் எங்கள் வளங்களுக்கு முன்னுரிமை அளிப்பதே விவேகமானதாக கருதுகிறோம்.

எங்கள் முன்னுரிமைப்படுத்தப்பட்ட குறிக்கோள்களுக்கு இணங்க, வரவிருக்கும் ஆட்டோ எக்ஸ்போவைத் தவிர்க்க, நாங்கள் மிகவும் விவாதித்த பின்னர் முடிவு செய்துள்ளோம் என வெளியிட்டுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போ 2020

மேலும் ஃபோர்டு இந்தியா, ராயல் என்ஃபீல்ட், பஜாஜ் ஆட்டோ ( முறையே இரு நிறுவனங்களும் கடந்த முறையும் பங்கேற்கவில்லை), டிவிஎஸ், டொயோட்டா மற்றும் ஜீப் உள்ளிட்ட நிறுவனங்களும் பங்கேற்க வாய்ப்பில்லை.

2020 ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி சுசுகி, டாடா, மஹிந்திரா, ஹூண்டாய், கியா, எம்ஜி மோட்டார்ஸ், வோக்ஸ்வேகன் குழுமம், மெர்சிடிஸ்-பென்ஸ், சிட்ரோயன் மற்றும் ரெனால்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளது. மேலும் சீனாவின் கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனமும் பங்கேற்கலாம்.

 

Related Motor News

செக்வே அபேக்ஸ் எலெக்ட்ரிக் பைக் அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ

சீனாவின் ஹைய்மா ஆட்டோமொபைல் கார்கள் அறிமுகம் – 2020 ஆட்டோ எக்ஸ்போ

2020 ஆட்டோ எக்ஸ்போ – தி மோட்டார் ஷோ தேதி அறிவிப்பு

Tags: Auto expo 2020
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

kia ev9

கியா EV9 எலெக்ட்ரிக் எஸ்யூவி கான்செப்ட் அறிமுகம் : ஆட்டோ எக்ஸ்போ 2023

Kia KA4 Carnival

ஆட்டோ எக்ஸ்போ 2023: கியா KA4 (கார்னிவல்) அறிமுகம்

550 கிமீ ரேஞ்சு.., மாருதி சுசூகி eVX EV எஸ்யூவி கான்செப்ட் அறிமுகம் : Auto Expo 2023

டாடா சஃபாரி, ஹாரியர் எலெக்ட்ரிக் எஸ்யூவி டீசர் வெளியீடு – Auto Expo 2023

புதிய 16 சீட்டர் டாடா மோட்டார்ஸ் விங்கர் வெளியானது – ஆட்டோ எக்ஸ்போ 2020

டாடாவின் எலெக்ட்ரிக் டிரக் அல்ட்ரா T7 EV அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2020

ஆட்டோ எக்ஸ்போவில் டாடா வெளியிட்ட புதிய ப்ரிமா டிரக்குகள் அறிமுகம்

ஆட்டோ எக்ஸ்போவில் ஹெய்மா 8 எஸ் எஸ்யூவி காட்சிக்கு வந்தது

Haima 7X: ஹெய்மா 7எக்ஸ் எம்பிவி கார் வெளியானது – ஆட்டோ எக்ஸ்போ 2020

2021-ல் விற்பனைக்கு வரும் டாடா அல்ட்ராஸ் இவி மின்சார கார் அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2020

அடுத்த செய்திகள்

vinfast vf7 car

தூத்துக்குடியில் தயாராகும் வின்ஃபாஸ்ட் கார்களுக்கு முன்பதிவு துவங்கியது

kinetic dx electric scooter

ஜூலை 17 ., கைனடிக் DX எலக்ட்ரிக் ஸ்கூட்டராக அறிமுகம்.!

kia carens clavis ev price

ரூ.17.99 லட்சத்தில் கியா காரன்ஸ் கிளாவிஸ் இவி விற்பனைக்கு வெளியானது

டெஸ்லா மாடல் Y விலைப்படியல்

ரூ.59.89 லட்சம் விலையில் டெஸ்லா மாடல் Y விற்பனைக்கு வெளியானது

சிஎன்ஜி ஹூண்டாய் ஆரா செடானில் E வேரியண்ட் அறிமுகம்

ரூ.8.08 லட்சத்தில் ஹூண்டாய் ஆரா S AMT வேரியண்ட் வெளியானது

yamaha fz-x hybrid

ரூ.1.52 லட்சத்தில் FZ-X மைல்டு ஹைபிரிட் ஆப்ஷனை வெளியிட்ட யமஹா

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan