இந்தியாவின் முதன்மையான கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகி இந்தியா, ஆட்டோ எக்ஸ்போ 2018 அரங்கில் புதிய மாருதி சுசுகி கான்செப்ட் ஃப்யூச்சர்-S மாடலை மாருதி அறிமுகப்படுத்தியுள்ளது.
மாருதி சுசுகி கான்செப்ட் ஃப்யூச்சர்-S
மாருதி சுசூகி நிறுவனத்தின் எதிர்கால மாடல்களின் தொடக்க நிலை டிசைனாக மாருதி சுசுகி கான்செப்ட் ஃப்யூச்சர்-S பார்க்கப்படுகின்றது. இந்திய சந்தைக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட உள்ள இந்த கான்செப்ட் எஸ்யூவி நவீன தலைமுறையினர் விரும்பும் வசதிகளை பெற்றதாக உற்பத்தி நிலை மாடல் வரவுள்ளது.
இந்த எஸ்யூவி காரில் மாருதி சொந்த தயாரிப்பாக வரவுள்ள 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் உட்பட பெட்ரோல் எஞ்சின் ஆகியவற்றுடன் எதிர்காலத்தில் மின்சாரத்தில் இயங்கும் வகையிலான பேட்டரிகாராகவும் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
விற்பனையில் பட்டைய கிளப்புகின்ற விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் இக்னிஸ் ஆகிய கார்களை பின்னணிக கொண்ட கான்செப்ட் ஃப்யூச்சர்-S மிக உயரமான வீல்பேஸ் மற்றும் நேர்த்தியான முகப்பு அமைப்புடன் காட்சியளிக்கின்றது.
உற்பத்தி நிலை மாடல் இந்த ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதால், அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.