2016 இஐசிஎம்ஏ மோட்டார்சைக்கிள் ஷோ அரங்கில் டுகாட்டி ஸ்க்ராம்பளர் அணிவரிசையில் புதிதாக ஸ்க்ராம்பளர் கஃபே ரேசர் மற்றும் ஸ்க்ராம்பளர் டெசர்ட் ஸ்லெட் என இரு மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.
மிலன் மோட்டார் சைக்கிள் ஷோவில் வெளியாகியுள்ள மிக முக்கியமான மாடல்களான இரு ஸ்க்ராம்பளர் மோட்டார் சைக்கிள்களும் மிக நேர்த்தியான வடிவமைப்பினை பெற்று கவர்ச்சிகரமான மாடல்களாக காட்சியளிக்கின்றது.
டுகாட்டி ஸ்க்ராம்பளர் கஃபே ரேசர்
ஸ்க்ராம்பளர் கஃபே ரேசர் மாடல் கருப்பு மற்றும் தங்க நிற கலவையில் அமைந்துள்ளதை பிளாக் காபி வண்ணம் என டுகாட்டி அழைக்கின்றது. கருப்பு வண்ணத்தினை பெற்று சில இடங்களில் தங்க நிறத்திலான அசென்ட்ஸ்களை பெற்றுள்ள கஃபே ரேசர் மாடலில் 75 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 803சிசி எல்-ட்வீன் ஏர் மற்றும் ஆயில் கூல்டூ என்ஜினை பெற்றுள்ளது. இதன் டார்க் 68 நியூட்டன் மீட்டர் பெற்றுள்ளது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
ஸ்க்ராம்பளர் எழுத்துகள் செக்ட் கொடி கிராபிக்ஸ் பெற்று 54 என்கின்ற எண்ணை இருபக்கங்களிலும் எழுதப்பட்டுள்ளது.இதில் 10 ஸ்போக் கொண்ட 17 இன்ச் தங்க நிற அலாய் வீல் , முன்பக்க டயரில் 330 மிமீ செமி-புளோட்டிங் டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க டயரில் 240 மிமீ டிஸ்கினை பெற்று ஏபிஎஸ் பிரேக் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளது. இதன் எடை 188 கிலோ கிராம் மற்றும் இருக்கை உயரம் 805 மிமீ ஆகும்.
டுகாட்டி ஸ்க்ராம்பளர் கஃபே ரேசர் விலை £ 9395 (ரூ.7.70 லட்சம்)
டுகாட்டி ஸ்க்ராம்பளர் டெசர்ட் ஸ்லெட்
ஸ்க்ராம்பளர் டெசர்ட் ஸ்லெட் மாடலில் 75 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 803சிசி எல்-ட்வீன் ஏர் மற்றும் ஆயில் கூல்டூ என்ஜினை பெற்றுள்ளது. இதன் டார்க் 68 நியூட்டன் மீட்டர் பெற்றுள்ளது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
வெள்ளை மற்றும் சிவப்பு என இருவிதமான வண்ணங்களில் கிடைக்க உள்ள டெசர்ட் ஸ்லெட் அந்த கால பாரம்பரிய வடிவமைப்பினை பெற்று நவீன ஸ்டைலிங் மற்றும்நுட்ப அம்சங்களை பெற்றதாக விளங்கும் டெசர்ட் ஸ்லெட் பைக்கில் முன்பக்கத்தில் 19 இன்ச் அலாய் வீல் மற்றும் பின்பக்கத்தில் 17 இன்ச் அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. இதன் எடை 207 கிலோகிராம் மற்றும் இருக்கை உயரம் 831 மிமீ ஆகும்.
டுகாட்டி ஸ்க்ராம்பளர் டெசர்ட் ஸ்லெட் விலை £ 9395 (ரூ.7.70 லட்சம்)