தொடக்க நிலை க்ராஸ்ஓவர் எஸ்யூவி மாடலாக வெளியிடப்பட்டுள்ள ஃபோக்ஸ்வேகன் T-Roc எஸ்யூவி MQB பிளாட்ஃபாரத்தின் அடிப்படையில் டிகுவான் எஸ்யூவி மாடலுக்கு கீழாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஃபோக்ஸ்வேகன் T-Roc எஸ்யூவி
முதன்முறையாக 2014 ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த எஸ்யூவி கான்செப்ட் மாடலின் உற்பத்தி நிலை மாடலுக்கு இணையான தோற்ற பொலிவினை பெற்றதாக வந்துள்ள T-Roc இந்த ஆண்டின் இறுதியில் சர்வதேச அளவில் ஜெர்மனி , இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் விற்பனைக்கு வெளியிடப்படும் வாய்ப்புகள் உள்ளது.
T-Roc மிக அகலமான ஸ்போர்ட்டிவ் கிரில் வடிவமைப்பினை பெற்றதாகவும், தட்டையான முகப்பு விளக்குகள், அகலமான ஏர்டேம் தேன்கூடு கிரில் போன்றவற்றுடன் பக்கவாட்டில் பிளாஸ்டிக் கிளாடிங் போன்றவற்றுடன் கம்பீரமான தோற்றத்தை வெளிப்படுத்தும் அலாய் வீல் அம்சத்துடன் க்ரோம் பட்டை A பில்லர் முதல் C பில்லர் வரை பதிக்கபட்டுள்ளது.
பின்புறத்தில் மிக நேர்த்தியான ஸ்பாய்லர் மற்றும் பம்பரினை பெற்றதாக வந்துள்ள இந்த காரின் மேற்புறத்தில் கருப்பு நிறத்தை பெற்று இரட்டை நிற கலவையை கொண்டுள்ளது.
மிக அகலமான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெற்றுள்ள டி-ராக் இன்டிரியரில் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகளுடன் தாராளமான 5 இருக்கை வசதியுடன் வந்துள்ளது.
சர்வதேச அளவில் பல்வேறு என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ள டி-ராக் எஸ்யூவி மாடலில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் முன்பக்க வீல் டிரைவ் பெற்றதாக உள்ள இந்த மாடலில் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனலாக கிடைக்கின்றது.
இந்தியா சந்தையில் ஃபோக்ஸ்வேகன் T-Roc எஸ்யூவி அறிமுகம் செய்யபடுவதற்கான வாய்ப்புகள் எதிர்காலத்தில் அமையலாம்.