இந்தியாவில் டுகாட்டி நிறுவனத்தின் டுகாட்டி மான்ஸ்டர் 797 பைக் ரூபாய் 7.70 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்படுள்ளது. தொடக்க நிலை ஸ்போர்ட்டிவ் பைக் மாடலாக மான்ஸ்டர் 797 விளங்குகின்றது.

2017 டுகாட்டி மான்ஸ்டர் 797

இந்தியாவில் டுகாட்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்த வருடத்தில் மல்டிஸ்ட்ராடா 950, மான்ஸ்டர் 797, சூப்பர்ஸ்போர்ட், ஸ்கிராம்ப்ளர் டெஸ்ர்ட் ஸ்லெட் மற்றும் ஸ்கிராம்ப்ளர் கஃபே ரேசர் போன்ற 5 பைக்குகளை அறிமுகம் செய்ய திட்டமிருந்த நிலையில் முதற்கட்டமாக இரண்டு பைக்குகளை வெளியிட்டுள்ளது.

தொடக்கநிலை ஸ்போர்ட்டிவ் மாடலாக விளங்கும் மான்ஸ்டர் 797 பைக்கில் 75 ஹெச்பி பவருடன், 68 என்எம் டார்கினை வெளிப்படுத்தும் திறன்கொண்ட 803சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மான்ஸ்டர் 1200 பைக்கின் வடிவ உந்துதலை பெற்ற இந்த சிறிய ரக மாடலில் வட்ட வடிவ ஹெட்லேம்புடன் கூடிய எல்இடி விளக்குகளை பெற்று 43மிமீ முன்பக்க ஃபோர்க்குகளுடன் பின்புறத்தில் அட்ஜெஸ்டபிள் மற்றும் ப்ரீலோடேட் மோனோ சாக் அப்சார்பர் வழங்கப்பட்டுள்ளது.

ப்ரம்போ ப்ரேக்ஸ் மற்றும் போஷ் 9.1 ஏபிஎஸ் பிரேக் பெற்றுள்ள மான்ஸ்டர் 797 பைக்கில் 16.5 லிட்டர் கொள்ளளவு பெற்ற டேங்கினை கொண்டுள்ளது.இந்த பைக்கில் வெப்பத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் 2 குழாயுடன் கூடிய ஒரு புகைப்போக்கி வழங்கப்பட்டுள்ளது.

ரூபாய் 7.70 லட்சம் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு 2017 டுகாட்டி மான்ஸ்டர் 797 பைக் வெளியிடப்பட்டுள்ளது.

2017 Ducati Monster 797 Image Gallery