இந்திய சந்தையில் இரண்டு புதிய சூப்பர் பைக்குகளை வெளியிட்டுள்ள டுகாட்டி நிறுவனம் ரூ. 12.60 லட்சம் விலையில் புதிய டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 950 பைக்கினை வெளியிட்டுள்ளது.

2017 டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 950

இந்தியாவில் டுகாட்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்த வருடத்தில் மல்டிஸ்ட்ராடா 950, மான்ஸ்டர் 797, சூப்பர்ஸ்போர்ட், ஸ்கிராம்ப்ளர் டெஸ்ர்ட் ஸ்லெட் மற்றும் ஸ்கிராம்ப்ளர் கஃபே ரேசர் போன்ற 5 பைக்குகளை அறிமுகம் செய்ய திட்டமிருந்த நிலையில் முதற்கட்டமாக இரண்டு பைக்குகளை வெளியிட்டுள்ளது.

மல்டிஸ்ட்ராடா 950 பைக்கில் 113 ஹெச்பி பவருடன், 96.2 என்எம் டார்கினை வெளிப்படுத்தும் திறன்கொண்ட 973சிசி டெஸ்டஸ்ட்ரேட்டா எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

மல்டிஸ்ட்ராடா என்டியூரா பைக்கின் வடிவ உந்துதலை பெற்ற இந்த மாடலில் 19 அங்குல முன்பக்க வீலை பெற்று பின்புறத்தில் 17 அங்குல வீலை கொண்டு மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 48மிமீ முன்பக்க ஃபோர்க்குகளுடன் பின்புறத்தில் அட்ஜெஸ்டபிள் மோனோ சாக் அப்சார்பர் வழங்கப்பட்டுள்ளது.

ப்ரம்போ ப்ரேக்ஸ் மற்றும் போஷ் 9.1 ஏபிஎஸ் பிரேக் பெற்றுள்ள இந்த பைக் வருகின்ற அக்டோபர் மாதம் முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

ரூபாய் 12.60 லட்சம் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு 2017 டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 950 பைக் வெளியிடப்பட்டுள்ளது.